பீட்ரூட் பிடிக்காதவர்களா நீங்கள்? இனி வேண்டாம் என்றே சொல்ல மாட்டீர்கள்!
இயற்கை உரமாக கொடுக்கப்பட்டுள்ள காய்கறி பழங்கள் நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் உடலுக்கு தேவையான ஆற்றலையும் அள்ளித் தருவதில் முக்கிய பங்கு வகித்துக் கொண்டிருக்கின்றன. அதிலும் காய்கறிகளில் பீட்ரூட் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் சுவை பலருக்கு பிடிக்காது. ஆனால், இந்த பீட்ரூட்டில் உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகள் பல உள்ளது. அவற்றை அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
பீட்ரூட்டில் உள்ள நன்மைகள்
நமது உடலுக்கு தேவையான வைட்டமின், மினரல் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடனட்கள் இந்த பீட்ரூட்டில் அதிக அளவில் கொண்டுள்ளது. இதன் காரணமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் பீட்ரூட் மன அழுத்தத்தை குறைக்க உதவுவதுடன் இரத்த சோகை உள்ளவர்களுக்கு இது அதிக நன்மைகளை அள்ளிக் கொடுக்கிறது. மேலும் பீட்ரூட் தொடர்ந்து சாப்பிடுவதால் ரத்த செல்களின் உற்பத்தி அதிகரிப்பதுடன் உடலில் இரும்பு சத்து அதிகரிக்க இது காரணியாக அமைகிறது. தூக்கம் சரியாக வரவில்லை என்றால் இந்த பீட்ரூட்டை தினமும் ஜூஸாக அல்லது உணவுடன் சமைத்து சாப்பிடலாம். ஏனென்றால், இந்த பீட்ரூட்டில் உள்ள வேதிப்பொருட்கள் காரணமாக நரம்புகளை தளர்த்தி இது ஆரோக்கியமான தூக்கத்தை கொடுக்கும்.
மேலும், பீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் காரணமாக நமக்கு ஏற்படக்கூடிய மன உளைச்சல் மற்றும் தேவையற்ற யோசனைகளில் இருந்து விடுபட்டு நல்ல மனநிலையை கொடுக்கும். ரத்தக் கொதிப்பு அதிகம் உள்ளவர்கள் இந்த பீட்ரூட்டை எடுத்துக் கொள்ளும் பொழுது ரத்த கொதிப்பை கட்டுப்படுத்துகிறது. மேலும் இதய அடைப்பு, இதய கோளாறு ஆகியவற்றையும் கட்டுப்படுத்த இந்த பீட்ரூட் உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் வெள்ளரிக்காய் சாற்றுடன் பீட்ரூட்டை கலந்து குடிக்கும் போது சிறுநீரகம் மற்றும் பித்தப்பையில் தங்கியிருக்கும் கழிவுகள் வெளியேறி சுத்தமாக உதவுவதுடன் மூல நோயை குணப்படுத்தவும் இது உதவுகிறது.
மேலும், புற்று நோய் உள்ளவர்கள் தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வரும் பொழுது அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் காரணமாக புற்றுநோயை உருவாக்கக்கூடிய செல்களையும் அழிக்கிறது. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இந்த பீட்ரூட் நண்பன் என்று சொல்லலாம். மேலும் இந்த பீட்ரூட்டை பச்சையாக சாப்பிடும் பொழுதுதான் முகத்தில் பொலிவு அதிகரிப்பதுடன் வறண்ட சருமம் பளபளப்பாக மாறுகிறது. பீட்ரூட் மட்டுமல்லாமல் அதன் இலைகளும் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அள்ளித் தருவதில் முக்கியமானது.