பெண்களே உங்கள் உடல் ஆரோக்கியத்தை பேணி காப்பதில் கவனம் செலுத்துபவரா நீங்கள் ? அப்ப கண்டிப்பா இதை படிங்க?
பெண்களை பொறுத்தவரையில், பிறந்த வீடாக இருந்தாலும், புகுந்த வீடாக இருந்தாலும் தனக்கென வாழாது தனது குடும்பத்துக்காக வாழ்பவள் தான் பெண். எந்நேரமும் வேலை, வேலை என அலையும் பெண்கள், தங்களது உடல் ஆரோக்கியத்தை கவனிப்பதில் முக்கியம் கொடுப்பதில்லை.
தற்போது இந்த பதிவில் பெண்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
காலை உணவு
காலை உணவு ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் அவசியமான ஒன்று. ஆனால் காலை உணவை சாப்பிடாமல் அலர்ச்சியமாக விட்டுவிடுகிறோம். ஆனால், இது தான் நமது பல ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது. எனவே வீட்டில் செய்யும் பெண்ளாக இருந்தாலும், வெளியில் வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தாலும், உணவை தவிர்க்க கூடாது.
இரத்த சர்க்கரை
நமது உடல் ஆரோக்கியத்திற்கு இரத்த சர்க்கரை அளவு மிகவும் முக்கியமான ஒன்று. இதனை நாம் கட்டுக்குள் வைத்திருந்தால், நமது உடல் ஆரோக்கியத்தை மிகவும் சிறப்பாக மேம்படுத்தலாம். இரத்த சர்க்கரை மாவு கட்டுக்குள் இல்லாத பட்சத்தில், பல பிரச்சனைகள் ஏற்பாடாகி கூடும்.
இரும்புச்சத்துள்ள உணவுகள்
பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த, இரும்புச்சத்துள்ள உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும். அவ்வாறு சாப்பிட்டால் தான் நமது உடலில் என் ஆரோக்கிய குறைபாடுகளும் ஏற்படாமல், ஆரோக்கியமாக இருக்கலாம்.
சோயா பால்
பெண்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சோயா பால் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. பசும்பால், எருமைப்பாலில் அதிகமான கொழுப்பு சத்துக்கள் இருப்பதால், இவை உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. எனவே பெண்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்து கொள்ள சோயா பால் அருந்துவது நல்லது.