இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதய நோயால் பாதிக்கப்படுகின்றன. இதற்கு காரணம் நாம் நம் தமிழ் கலாச்சார உணவுகளை மறந்து, மேலை நாட்டு உணவுகளின் மீது அதிகமாக நாட்டம் செலுத்துவது தான் காரணமாக உள்ளது. இதனால் மிகச் சிறிய வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு கூட மரித்து விடுகின்றன. தற்போது இந்தப் பதிவில் இதய சம்பந்தமான நோய்கள் குணமாக என்ன செய்யலாம் என்பது பற்றி பார்ப்போம்.
தூதுவளை காய்
தூதுவளை என்பது பல நோய்களை குணப்படுத்தக்கூடிய ஒரு வகையான மூலிகை ஆகும். இந்த இலையின் காய்களை மோரில் ஊறவைத்து அரைத்து சாப்பிட்டு வந்தால், இதய சம்பந்தமான நோய்கள் குறையும்.
அத்தி பழம்
இதய சம்பந்தமான பலவீனங்கள் குணமாக அத்திப் பழங்களை நன்கு சுத்தம் செய்து எடுத்து அதை வெயிலில் காயவைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை உரலில் போட்டு இடித்து துணியில் சலித்து எடுத்து வைத்து, ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பாலில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் இதய சம்பந்தமான பலவீனங்கள் குறையும்.
வெள்ளரி பிஞ்சு
வெள்ளரிப் பிஞ்சுகள் நமது உடலில் பலவகையான நோய்களை குணப்படுத்தக்கூடிய ஒன்று. அந்த வகையில் வெள்ளரிப் பிஞ்சுகளை அவை கிடைக்கும் காலங்களில் ஒன்று அல்லது இரண்டு தினமும் சாப்பிட்டு வந்தால் இதய சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…