குழந்தைகள் படிச்சதை எல்லாம் மறந்து போறாங்களா நினைவாற்றலை அதிகரிக்க இத செய்யுங்க
இன்றைய குழந்தைகள் என்பவர்கள் நாளைய இளைய சமுதாயத்திற்கு உருவாக்க இருக்கும் அடிப்படை காரணிகள். அவர்களை நாம் மிகவும் பாதுகாப்பாக வளர்க்க வேண்டியது மிகவும் அவசியம்.
பெற்றோர்களாகிய நம் அனைவரின் முக்கிய கடமையாகும். குழந்தைகளின் உடல் நலனுக்கு உணவு எவ்வளவு முக்கியமோ அதேபோல் அவர்களின் மனநலனும் மிகவும் அவசியமாகும்.
சில குழந்தைகள் படிப்பில் அதிக கவனம் செலுத்தி படிப்பார்கள்.ஆனால் அவர்கள் தேர்வு எழுதுவதற்கு செல்லும் முன்பு அனைத்தையும் மறந்து விடுவார்கள்.குழந்தைகள் படிப்பதை மறக்காமல் இருக்க சில வழிமுறைகள் இருக்கிறது.அதனை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
குழந்தைகள் படிக்காமல் இருக்க முக்கிய காரணங்கள்:
குழந்தைகள் படிக்காமல் இருப்பதற்கான முக்கியகாரணங்கள் என்னவென்றால் அவர்களின் விளையாட்டு போக்கான குணம். குழந்தைகளை கார்ட்டூன் சேனல்கள் பார்ப்பதை அனுமதிக்ககூடாது.
அவர்கள் கார்ட்டூன் சேனல்களை பார்க்கும் போது அவர்கள் அந்த கதாபாத்திரங்களாக அவர்களை நினைத்து அந்த கதாபாத்திரம் போல் தன்னை மாற்றி கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பல காரியங்களை அறியாமல் செய்வார்கள்.
அதுவும் குழந்தைகளின் படிப்பை பாதிக்கும். படிக்கும் நேரங்களில் அவர்களுக்கு எந்த விதமான இடையூறுகள் இல்லாமல் பார்த்து கொள்வது மிகவும் அவசியம்.
குழந்தைகளை செல் போன்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கக்கூடாது. அவர்கள் செல்போன்கள் பயன்படுத்துவதால் பல உடல் மற்றும் உள சம்மந்தமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
நினைவாற்றலை வளர்க்க என்ன செய்யலாம்:
குழந்தைகளை படி படி என்று அழுத்தம் கொடுக்ககூடாது. அவர்களின் மனநலனிற்கு ஏற்றவாறு அன்பாக நடத்தி படிப்பதில் கவனம் செலுத்த ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் குழந்தைகள் படிப்பதில் ஆர்வம் செலுத்த தொடங்கலாம்.
இரவு படுக்கைக்கு போகும் முன்பு 15 நிமிடம் நல்ல காற்றோட்டமான இடங்களில் நடை பயிற்சி மேற்கொள்வது.
குழந்தைகள் சதுரங்கம் விளையாடுவதை ஊக்குவிப்பது மிகவும் சிறந்தது. மேலும் ஓவியம் வரைதல் நினைவாற்றலை அதிகரிக்க உதவும் காரணிகளாகும்.
படிக்கும் படங்களை மனதில் கொண்டு வர தினமும் 20 நிமிடம் மனபயிற்சி செய்தல் மிகவும் அவசியமாகும். அது குழந்தைகளின் நினைவாற்றலை ஊக்குவிக்க உதவியாக இருக்கும்.
குழந்தைகளை தினமும் உடற்பயற்சி செய்ய வைப்பது மிகவும் சிறந்த பழக்கமாகும்.தினசரி விடியலுக்கு முன்பு 10 நிமிடம் தியானம் ,யோகா கண்களை மூடி கொண்டு செய்வது நல்ல பலன் தரும்.
லைக்கோ போடியம் 200 மற்றும் அன்கார்டியம் 200 என்ற ஹோமியோ மருந்துகள் மிக சிறந்த பலன்களை அளிக்கும். பழங்களை ஜூஸ் போடாமால் அப்படியே மென்று உண்ணுதல் மிகவும் நல்லது. உணவில் அதிக காரம், உப்பு, புளி சேர்க்க கூடாது.
கீரைவகைகள்:
கீரைவகைகள் உடம்பிற்கு பலன் தருவதோடு மட்டுமல்லாமல் நினைவாற்றலை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.
வல்லாரை ,தூதுவளை, பசலை கீரை போன்ற மூலிகை கீரைகளை உண்ணுவதால் மிகுவும் பயன் அளிக்கும். கீரைகளில் உண்ணுவதால் உடலுக்கு மிகவும் பயன் அளிக்கும்.
வெண்டை பிஞ்சு:
வெண்டைக்காயில் உயர்தரமான பாஸ்பரசும், தாவரப்பசையும், நார்ப்பொருளும் உள்ளன. எளிதில் நமது உடலால் ஏற்றுக்கொள்ளப்படும் சிறந்த மாவுச்சத்துப் பொருட்களும் உள்ளன. இவற்றை நமது குழந்தைகளுக்கு உணவாகவோ ,பச்சையாகவோ சாப்பிட கொடுத்து வந்தால் மிகவும் பயன் அளிக்கும்.நல்ல புத்திகூர்மை கிடைக்கும். எனவே வெண்டை பிஞ்சுகளை பச்சையாக உண்டு வந்தால் நல்ல பலன் தரும்.
பழங்கள் :
பழங்களில் அதிகமான கனிம சத்துக்களும்,பல வைட்டமின் சத்துக்களும் நிறைந்து காணப்படுவதால் இது குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்க உதவும்.
ஆப்பிள், வாழைப்பழம் ,ஆரஞ்சு ஆகிய பழங்களை உண்டு வந்தால் நம் குழந்தைகளின் நினைவாற்றல் பெருகும்.பூளு பெர்ரி, ஸ்டரா பெர்ரி பழங்களும் இதற்கு பேருதவி புரிகிறது.
மாதுளை ஜூஸை தொடர்ந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் ஹீமோகுளோபின் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் உடலும் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.
காய்கறிகள்:
கேரட் , சிவப்பு முள்ளங்கி, தக்காளி ,கொடி முந்திரி,கிச்சிலி ,குருதி நெல்லி போன்ற பொருட்கள் உயிர்சத்துக்களையும், கனிம சத்துக்களையும் கொண்டுள்ளதால் கவனக்குறைவை போகும் நினைவாற்றலை பெருக்கும்.
வால் நட்ஸ் :
வால்நட் குழந்தைகளின் நினைவாற்றலை பெருக்கி கொள்ள பேருதவி புரிகிறது. வால் நட் நமது உடலில் உள்ள அசுத்த ரத்தத்தை சுத்திகரித்து சுத்த ரத்தத்தை மூளைக்கு கடத்துகிறது.
இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் இருதய நோய்கள் வராமல் காக்கிறது. தினமும் 5 வால் நட்ஸ் சாப்பிட்டால் இருதயம், கொழுப்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் காக்கலாம்.
மீன்:
மீன்களில் நிறைந்திருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் அதிகரிக்க உதவுகிறது. குழந்தைகளின் பார்வைத்திறனுக்கும் அருமருந்தாகும்.
குழந்தைகளுக்கு மீன்களை உண்ண கொடுப்பதால் இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. உடலில் கெட்ட கொழுப்பு படிவதை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க வழிவகை செய்கிறது.