முழங்காலில் உள்ள கருப்பு போக்க இதை செய்யுங்கள்.!
நமது உடலில் உள்ள சில அங்கங்கள் இயற்கையாகவே கருப்பாக காணப்படும் அதில் ஒன்றுதான் முழங்கால். என்னதான் வெள்ளையாக சில இருந்தாலும் கால் முட்டி என்பது கொஞ்சம் கருப்பாக காணப்படும் இதனால் சிலர் குட்டை ஆடை அணியாமல் இருக்கின்றனர். எனவே இந்த கறுப்பு நிறத்தைப் போக்க தற்போது பார்க்கலாம்.
பேக்கிங் சோடாவுடன் , தண்ணீருடன் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். அந்த பேஸ்ட்டை முழங்கை, முழங்காலில் தடவி 5 நிமிடம் அப்படியே விட்டு பிறகு தண்ணீரில் கழுவவும்.
ஒரு வெங்காயம் , ஒரு பல் பூண்டு இரண்டையும் எடுத்துக் கொண்டு அரைத்து கொள்ளவும். அந்த கலவையை உங்கள் முட்டியில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து 15 நிமிடத்திற்கு பிறகு தண்ணீரால் கழுவவும். பின்னர் ஒரு பங்கு கிளிசரின் மற்றும் எலுமிச்சம் சாறு , இரண்டு பங்கு பன்னீர் சேர்த்துக் கொள்ளவும் இதை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து முட்டியில் தடவவும். இதை தொடர்ந்து செய்து வருவதால் விரைவில் அந்த கருமை மறையும்.
ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யை எடுத்து முழங்கை மற்றும் முழங்காலில் தடவி நன்றாக தேய்க்கவும். இரவு தூங்குவதற்கு முன்பும் வாரத்திற்கு மூன்று முறை இதனைச் செய்யலாம். இதனால் உடனடியாக கருமை மறைகிறது.