சிலர் நன்றாக தான் இருப்பார்கள். ஆனால் எப்போது ஒருசிலரின் தீயப்பார்வை அவர்கள் மீது விழுகிறதோ அப்போது அவர்கள் வாழ்வில் பல்வேறு துன்பங்களை சந்திப்பர். இது போன்று விழக்கூடிய எதிர்மறை சக்தியை அடியோடு நீக்க எளிமையாக இந்த முறையில் நீங்கள் திருஷ்டி கழித்து பாருங்கள். உங்களை சூழ்ந்துள்ள அனைத்து கண் திருஷ்டிகளும் ஒரே நொடியில் நீங்கி விடும். இதற்கு முதலில் எலுமிச்சை பழம் ஒன்று தேவைப்படும். ஒரு சிறிய கிண்ணத்தில் பாக்கு போடுவதற்கு பயன்படுத்தக்கூடிய சுண்ணாம்பை சேர்க்க வேண்டும். அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து 5 சொட்டு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். சிறிது நேரத்திலேயே இந்த கலவை சிவப்பு நிறத்திற்கு வந்து விடும்.
இதில் கல் உப்பு கொஞ்சம் எடுத்து சேர்த்து கொள்ளுங்கள். இந்த கல் உப்பு சிவப்பு நிறத்தில் மாறி விடும். எலுமிச்சை பழத்தை 4 பாகங்களாக நறுக்க வேண்டும். நான்கு துண்டுகளும் சேர்ந்து தான் இருக்க வேண்டும். தனி தனியாக வந்துவிடக்கூடாது. அதனால் அடிப்பாகம் சேர்ந்து இருப்பதுபோல் வைத்து வெட்டி கொள்ளுங்கள். இந்த எலுமிச்சையில் சிவப்பு நிறமாக மாறி இருக்க கூடிய கல் உப்பை சேர்த்து கொள்ளுங்கள். இதன் இடுக்கில் 2 கிராம்பை சேர்த்து கொண்டு நீங்கள் திருஷ்டி சுற்றலாம். வாரத்தில் ஞாயிற்று கிழமையிலோ அல்லது அமாவாசை தினத்திலோ இந்த முறையில் நீங்கள் திருஷ்டி சுற்றலாம்.
அமாவாசை தினத்தில் செய்வது மிக மிக நல்லது. வீட்டில் உள்ள மூத்தோரிடம் இந்த எலுமிச்சையை கொடுத்து அனைவரையும் கிழக்கு நோக்கி அமரவைத்து திருஷ்டி சுற்ற வேண்டும். பின்னர் இந்த எலுமிச்சையை தெரு முச்சந்தியிலோ அல்லது யாரும் கால் படாதா ஒரு இடத்திலோ போட்டு விட வேண்டும். அவ்வளவு தான் தீய சக்திகள் உங்களிடம் இருந்து விலகி விடும். இதே போல் மாதம் ஒரு முறையோ அல்லது வாரத்தில் ஞாயிற்று கிழமைகளிலோ செய்து வருவது நன்மை பயக்கும்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…