தோசை , இட்லி சாப்பிட்டு போர் அடிச்சிட்டா கவலையே வேண்டாம் !!!! வாங்க புது விதமான கைமா டிஷ் சாப்பிடலாம் !!!!!!!!..
நமது அன்றாட வாழ்வில் தோசை, இட்லி நமது பாரம்பரிய காலை உணவாகி விட்டது. பள்ளிக்கு செல்லும் குழந்தை களுக்கு என்ன சாப்பாடு செய்வது என்று தினமும் ஒரே குழப்பம் அதையும் விட அவர்களை சாப்பிட வைப்பது மிக பெரிய வேலையாக தெரிகிறது.இனி கவலைய விடுங்க வெறும் இட்லியை கொடுத்தா குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் இட்லில புதுசா ஒரு ரெசிபி செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
- இட்லி -10
- வெங்காயம் -2
- கேரட் -2 துருவியது
- சோயாதுண்டுகள் -சிறிதளவு
- முட்டை கோஸ் -100 கி
- தக்காளி -1
- கொத்தமல்லி இலை-சிறிதளவு
- இஞ்சி பூண்டு விழுது -2 தேக்கரண்டி
- கறிவேப்பில்லை – சிறிதளவு
- கரம் மசாலா -1/2 தேக்கரண்டி
- மிளகாய் தூள் -1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
- மிளகு சீரகத்தூள் -1 1/2 தேக்கரண்டி
- எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
செய்முறை :
ஒரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைக்கவும் .அதில் எண்ணெய்யை ஊற்ற வேண்டும் .பின்பு அதில் நறுக்கிய வெங்காயத்தை போடவும்.அதன் பின்பு கருவேப்பில்லையை போடவும்.வெங்காயம் வதங்கியவுடன் அதில் இஞ்சி பூண்டு விழுது மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
சோயா துண்டுகளை நன்கு கழுவி இஞ்சி பூண்டு விழுது மற்றும் மிளகாய் சேர்த்து அவித்து பின்பு புழிந்து எடுத்து வைத்து கொள்ளவும்.இப்படி செய்தால் அதனுடைய பச்சை வாசனை போய்விடும். இஞ்சி பூண்டு விழுது மற்றும் மஞ்சள் தூள் ஆகியவை நன்கு வதங்கியவுடன் கேரட் ,முட்டைகோஸ் ,சோயா துண்டுகள்,தக்காளி ,கொத்தமல்லி இலைகளை சேர்த்து நன்கு வதக்கவும்.
மேலும் மிளகாய் தூள்,கரம் மசாலா தூள் ,உப்பு , மிளகு சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். இட்லியின் மீது எண்ணெய் ஊற்றி பிசைந்து வைத்து கொள்ள வேண்டும்.இட்லியின் மீது எண்ணெய் ஊற்றி பிசைவதால் இட்லி ஒட்டாமல் இருக்கும்.மிளகாய் தூள்,கரம் மசாலாதூள் நன்கு வதங்கியவுடன் இட்லி கலவையை சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.இட்லி கைமா ரெடி.