ஒரே நேரத்தில் 2 படகில் சவாரி செய்ய விரும்பவில்லை.! வந்தால் 100% உழைப்பை வழங்குவேன் – நடிகர் சோனு சூட்

ஒரே நேரத்தில் 2 படகில் சவாரி செய்ய நான் விரும்பவில்லை என்றும் ஒருவேளை அரசியலுக்கு வந்தால் 100% உழைப்பை வழங்குவேன் என்று நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.
தனியார் ஆடியோ ஸ்ட்ரீமிங் தளம் ஒன்றில் நடந்த நேரலை நிகழ்ச்சியில் நடிகர் சோனு சூட் கலந்துகொண்டு பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது, கடந்த 10 ஆண்டுகளாகவே அரசியலில் இணைய பல்வேறு வாய்ப்புகள் வந்தது. ஆனால், நடிகனான நான் செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது. நான் விரும்பும் பல விசயஙகளை நான் செய்ய வேண்டியுள்ளது. ஒருவர் எப்போது வேண்டுமானாலும் அரசியலில் நுழையலாம். ஆனால், ஒரே நேரத்தில் 2 படகில் சவாரி செய்ய நான் விரும்பவில்லை.
ஒருவேளை அரசியலுக்கு வந்தால் 100% உழைப்பை வழங்குவேன். யாருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்பதை உறுதி செய்வேன். அவர்களுடன் நேரத்தை செலவழிப்பேன். ஆனால், அதற்கு நிறைய நேரம் தேவைப்படும். எனவே, தற்போது நான் அதற்கு தயாராக இல்லை என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும், நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை என்றும் என்னால் எல்லா விஷயங்களையும் பரவலாக செய்யமுடிகிறது. யாரிடமும் நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்க வேண்டியதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கொரோனாவால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகளை இலவசமாக ஏற்பாடு செய்து தந்தார். பேருந்து மட்டுமின்றி சிலரைத் தனி விமானம் மூலமாகவும், அவரவர் ஊருக்கு அனுப்பி வைத்தார். மேலும், வறுமையில் வாடிய விவசாயிக்கு ட்ராக்டர், ஸ்பெய்னில் சிக்கியிருந்த சென்னை மாணவர்கள் வீடு திரும்ப விமான வசதி எனத் தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வந்த அவருக்கு, சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வந்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!
April 28, 2025