பாட்டி சொல்லை தட்டாதே -பாட்டியாக அர்ச்சனா , திருடனாக பாலாஜி.!களைக்கட்டும் பிக்பாஸ் வீடு.!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாட்டி சொல்லை தட்டாதே என்ற டாஸ்க் வழங்க ,அதில் பாட்டியாக அர்ச்சனா நடிக்க பிக்பாஸ் வீடு களைக்கட்டியுள்ளது .
பிக்பாஸ் நிகழ்ச்சியிலல் போட்டியாளர்களுக்கு ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான டாஸ்குகள் வழங்குவது வழக்கம். அதுவும் இந்த வாரம் தீபாவளி வாரம் என்பதால் சற்று ஸ்பெஷலாகவே இருக்கும். அந்த வகையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் பர்ஸ்ட் புரோமோவில் திருவிழா மாதிரி பிக்பாஸ் வீடு உள்ளது . அதில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு “பாட்டி சொல்லை தட்டாதே”என்ற டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது .
அதாவது இந்த டாஸ்க்கில் பிள்ளைகள் வருவார்கள் என்று ஒவ்வொரு பண்டிகைக்கும் காத்திருப்பவர்களுக்கு எப்போதும் ஏமாற்றம் தான் கிடைத்துள்ளது சொத்தை பிரித்து தருகிறேன், சொத்து வேண்டும் என்றால் எல்லோரும் என்னை வந்து பாருங்கள் என்று பாட்டி கூறுவதாகவும், சொத்துக்களுக்காக பாட்டி வீட்டுக்கு குடும்பத்தினர் வருகின்றனர். அங்கு பாட்டி சொத்து இருக்கும் பெட்டியை பூட்டி வைத்து விட்டு வருபவர்களில் தன்னை யார் நன்றாக கவனித்துக் கொள்கிறார்களோ அவர்களுக்கு தான் சொத்து என்று கூறுகிறார்.
இதனையடுத்து அந்த பெட்டியில் உள்ள சொத்தை பெற அனைவரும் பாட்டியை நன்றாக பார்க்கும் போது, ஒருவர் மட்டும் அந்த பெட்டியில் உள்ள சொத்தை திருடுவதற்கு திட்டம் போடுகிறார். இதுதான் இன்றைய டாஸ்கின் கதை .இதில் பாட்டி கேரக்டரில் அர்ச்சனா நடித்துள்ளார் . சொத்தை திருடபவனாக பாலாஜி நடித்துள்ளார் .இன்றைய பிக்பாஸ் யோசிக்க தக்கதாகவும், கலக்கலப்பாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
#Day37 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/pTFUN3tc8t
— Vijay Television (@vijaytelevision) November 10, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாஙகிய சூர்ய குமார்.! டெல்லி அணிக்கு இதுதான் டார்கெட்.!
May 21, 2025
175 பில்லியன் டாலரில் அமெரிக்காவை பாதுகாக்க `கோல்டன் டோம்’.., டிரம்ப் அறிவித்த திட்டம் என்ன?
May 21, 2025