காய்ந்து போன எலுமிச்சை தானேனு தூக்கி எறியாதீங்க…! இப்படி செய்து பாருங்க…!
காய்ந்து போன எலுமிச்சை நமக்கு எந்தெந்த விதத்தில் பயன்படுகிறது.
பொதுவாகவே நாம் நமது வீடுகளில் தேவைக்காக எலுமிச்சை பழம் வாங்குவது உண்டு. அவ்வாறு நாம் வாங்கும் எலுமிச்சை பழங்கள் சில நேரங்களில் மீதமாக இருக்கும் பட்சத்தில், அது காய்ந்து போய்விடும். அப்படி காய்ந்து போன எலுமிச்சை பழங்களை நாம் எதற்கும் பயன்படுத்துவது இல்லை. ஆனால், அந்த எலுமிச்சை பழம் கூட நமக்கு பல விதங்களில் உபயோகப்படுகிறது. தற்போது அந்த எலுமிச்சையின் பலன்கள் பற்றி பார்ப்போம்.
காய்ந்த எலுமிச்சை பழங்களை இரண்டாக வெட்டி, அதனுள் உள்ள சாற்றை எடுத்துவிட்டு, அந்த தோலை ஒரு வெள்ளை வைத்து மடித்து, நீங்கள் பொருட்களை வைத்துக்கும் அலமாரி அல்லது புத்தகங்கள், துணிகள் அடுக்கி வைத்திருக்கும் அலமாரியின் உள்ளே, பொருட்களின் இடைஇடையே வைக்க வேண்டும். அவ்வாறு வைத்தால், சிறிய, சிறிய பூச்சிகள், கரப்பான் பூச்சி, மூட்டை பூச்சி போன்ற பூச்சிகளின் தொல்லை இருக்காது.
நமது சருமத்தில் கை, கால், கழுத்து, பாதாம்,கணுக்கால் என அழுக்கு இருக்கும் பகுதிகளில், பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாற்றை, இந்த தோலால் தொட்டு மசாஜ் செய்து வந்தால், அழுக்குகள் போய்விடும். சருமம் தூய்மையாக இருக்கும்.
பின் ஒரு பாத்திரத்தில், பாத்திரம் தேய்க்கும் சோப்பு கலவையை எடுத்து அதில் காய்ந்த எலுமிச்சை பலத்தை போட்டு ஊற வைத்து, பின் அதனை வைத்து பாத்திரத்தை கழுவினால், பாத்திரம் பளபளப்பாக இருக்கும்.