கடையில் வாங்கும் மதுவோடு கொரோனாவை வீட்டுக்கு வீடு அனுப்பி வைக்க வேண்டாம்.! கஸ்தூரி டுவிட்.!
மதுவோடு கொரோனாவை வீட்டுக்கு வீடு அனுப்பி வைக்க வேண்டாம் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக அதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் நாடு முழுவதும் மே 17 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் சில மாவட்டங்களுக்கு ஊரடங்கில் தளர்வு செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் சமூக இடைவெளியை பின்பற்றி சில அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளும் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் டாஸ்மாக் கடைகளையும் திறக்கப்படுமோ என்ற அச்சம் பலரிடமும் இருந்து வந்த நிலையில் இதுவரை டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கான எந்த அறிவிப்பும் நேற்று மாலை வரை வெளிவரவில்லை. இதனை குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் டாஸ்மாக்கை இப்போது திறப்பதில்லை என்ற நல்ல முடிவை எடுத்துள்ள தமிழக அரசுக்கு நன்றி.
நானும் கூட கண்டிப்பாக திறப்பார்கள் என்று எண்ணினேன். என் கணக்கு தப்பாய் போனதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. தாய்மார்கள், குழந்தைகள் சார்பாக மீண்டும் நன்றி என்று கூறியிருந்தார்.
ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை வரும் 7ஆம் தேதி முதல் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது நடிகை கஸ்தூரி, அவசரப்பட்டுட்டேனே, என் கணக்கு பொய்ச்சிருச்சுன்னு சந்தோஷப்பட்டுட்டேனே. குடிக்கு அடிமையான தமிழக அரசை பற்றி என் கணக்கு சரி. அரசு பண்றது தப்பு. நாடு முழுவதும் இன்று நடந்த கூத்தை பார்த்த பிறகுமா மது விற்பனையை திறக்க துணிகிறீர்கள்? குடி கொரோனா ரெண்டுக்கும் ஒரே சமயத்தில் பலியிடுகிறீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் இதற்கு கேவலமான சப்பைக்கட்டுகள் வேறு, இதை நான் எதிர்பார்த்தது தான், நேற்று ஏமாந்து விட்டேன்.. தமிழ்நாடு அரசாங்கத்திற்கு அவமானம், மக்களின் எல்லை இயக்கத்தை கூட உங்களால் கட்டுப்படுத்த முடியாவிட்டால், நீங்கள் கொரோனாவை எவ்வாறு கட்டுப்படுத்துவீர்கள். தமிழக அரசை மன்றாடி கேட்டு கொள்கிறேன்.
கொரோனாவின் தாக்கம் குறைவாக இருந்த போது மூடிவிட்டு இப்பொழுது அதிகமாகும் போது திறக்காதீர்கள். இதனால் வரும் வருவாயை விட இழப்பு அதிகமாகிவிடும். கடையில் வாங்கும் மதுவோடு கொரோனாவை வீட்டுக்கு வீடு அனுப்பி வைக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவசரபட்டுட்டேனே. என் கணக்கு பொய்ச்சிருச்சுன்னு சந்தோஷ பட்டுட்டேனே. குடிக்கு அடிமையான தமிழக அரசை பற்றி என் கணக்கு சரி. அரசு பண்றது தப்பு. நாடு முழுவதும் இன்று நடந்த கூத்தை பார்த்த பிறகுமா மது விற்பனையை திறக்க துணிகிறீர்கள்? குடி கொரோனா ரெண்டுக்கும் ஒரே சமயத்தில் பலியிடுகிறீர்கள். pic.twitter.com/duAI9qAmIn
— Kasturi Shankar (@KasthuriShankar) May 4, 2020
இதற்கு கேவலமான சப்பைக்கட்டுக்கள் வேறு. இதை நான் எதிர்பார்த்ததுதான், நேற்று ஏமாந்துவிட்டேன். ஏமாந்து விட்டோம். #TASMAC
Shame on TN govt @CMOTamilNadu @PThangamanioffl
If you cannot even control border movement of people , how will you control corona.— Kasturi Shankar (@KasthuriShankar) May 4, 2020