வாயில் போடவேக்கூடாத அந்த 4 உணவுப்பொருட்கள் என்னென்ன தெரியுமா?
உண்ணும் உணவின் வாயிலாக நமது உடல் சக்தியை பெறுகிறது. சிலருக்கு ஒருவித உணவுப்பொருட்கள் கலந்த உணவு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்; அப்படிப்பட்ட நிலையில் அவர்கள் ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுப்பொருட்களை தவிர்த்து, அவை கலக்காத உணவுகளை தயாரித்து உட்கொள்வர். ஆனால், மனிதர்கள் அனைவருமே சில உணவுப்பொருட்களை அதிகம் உண்டாலோ அல்லது நேரடியாக வாயில் போட்டுக்கொண்டு அதிக நேரம் அவ்வுணவுப்பொருள் வாயில் இருக்க நேர்ந்தாலோ – அதன் விளைவு உடல் நலத்தை அதிகம் பாதிக்கும்.
அவ்வகையில் வாயில் போடவேக்கூடாத அந்த 4 உணவுப்பொருட்கள் என்னென்ன என்று இந்த பதிப்பில் படித்து அறியலாம்.
எலுமிச்சை
எலுமிச்சை பழத்தை அப்படியே நேரடியாக வாயில் வைத்து சுவைத்தால் அல்லது அதிக காலம்/முறை எலுமிச்சை பழத்தை சுவைத்தால் அது பற்களின் ஆரோக்கியத்தையும் ஈறுகளின் ஆரோக்கியத்தையும் சீர்குலைய செய்யும்; மேலும் இது வாயின் அமில-சமநிலையை பாதித்து, சுவை அறியும் திறனையும் பாதித்துவிடும்.
ஐஸ்கட்டிகள்
நம்மில் பலர் ஐஸ்கட்டிகளை வாயில் வைத்து சுவைப்பதுண்டு; ஆனால் இது மிக மோசமான பழக்கமாகும். இதனால் பற்களில் கூச்சம் ஏற்பட்டு, பற்களில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு.
கடினமான மிட்டாய்கள்
கடினமான மிட்டாய்களை கடித்து உண்ணும் பொழுது, அவை பற்களில் கேவிட்டி எனக்கூடிய பற்குழிகளை ஏற்படுத்தி பற்களை சிதைக்கும் தன்மை கொண்டவை; இந்த வகையான மிட்டாய்களை வாயில் வைத்து சுவைக்கும் பொழுது அது பற்களின் மீது தொடர்ந்து பட்டால், பற்கூச்சம் மற்றும் பற்குழி போன்ற பாதிப்புகள் ஏற்படுமாதலால் இப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.
உருளைக்கிழங்கு சிப்ஸ்
ஸ்டார்ச் அடங்கிய உருளைக்கிழங்கு சிப்ஸை உண்ணுகையில், அது பற்களின் இடையில் சிக்கிக்கொண்டால் சர்க்கரையாக மாறி பல் இடுக்குகளிலேயே தங்கிவிடும். இவ்வாறு சர்க்கரையாக மாறிய ஸ்டார்ச் பற்களை அரித்து சிதைத்துவிடும்; ஆகையால் இவற்றை உண்பதை தவிர்க்க முயலுங்கள்!