கோடைகாலத்தில் கருப்பு நிற ஆடைகளை அணிய கூடாது, ஏன் தெரியுமா?
- கோடை காலத்தில் நாம் அணிய வேண்டிய ஆடைகள்.
கோடை காலம் வந்து விட்டாலே பலருக்கும் பயம் பிடித்து விடுகிறது. ஏனென்றால் எந்தெந்த நேரங்களில் என்னென்ன நோய்கள் வந்து தாக்கும் என்று யாருக்கும் தெரியாது. நாம் எவ்வளவு தான் நாம்மை நாம் தற்காத்துக்கொள்ள முயற்சிகள் மேற்கொண்டாலும், எல்லாவற்றையும் தாண்டி, நம்மை பல நோய்கள் தாக்கி விடுகிறது.
இப்படிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து நம்மை நாம் பாதுகாத்து கொள்ள, கால நிலைகளை அறிந்து அதற்கேற்றவாறு நமது உணவு, உடைகளை மாற்றிக்கொள்வது தான் சிறந்து. எப்போதும் போல நாம் குளிக்கலாம் போன்று அப்படியே இருந்தால், நமது ஆரோக்கியத்தில் பல விதமான நோய்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
பிரகாசமான உடை
வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பெண்கள் கறுப்பு மற்றும் பிற பிரகாசமான நிறங்கள் கொண்ட ஆடைகளை அணிவதை தவிர்க்க வேணடும். ஏனெனில் அவற்றுக்கு வெப்பத்தை கிரகிக்கும் தன்மை அதிகமாக உள்ளதால் அவைகளைத் தவிர்த்து, வெள்ளை போன்ற இளம் நிறங்களில் உடைகள் அணியலாம்.
முடிந்தவரையில், உச்சி வெயிலில் வெளியில் செல்வதை தவிர்க்கலாம். அவ்வாறு வெளியே செல்ல நேர்ந்தால் குடை செல்ல வேண்டும். இல்லையெனில் குளிர் கண்ணாடிகளை அணிந்து செல்வது சிறந்தது.
பருத்தி ஆடையே சிறந்தது
கோடை காலத்தில் பெண்கள் அதிகமாக பருத்தி ஆடைகளை பயன்படுத்துவது மிக சிறந்தது. கோடைக்காலத்திற்கு ஏற்ற ஆடை பருத்தி ஆடைகளே ஆகும். பெண்கள் அணியும் உடைகள் அவர்களுக்கு இதமானதாக இருக்க வேண்டுமானால் அதற்கு பருத்தி ஆடைகளே சிறந்தது. பருத்தி ஆடைகள் தான் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க கூடிய ஆற்றலை கொண்டுள்ளது.
காதி ஆடைகள்
வெயில் காலங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் மிக சிறந்த உடை காதி உடைகள் தான். இந்த காதி ஆடையை சேலையாகவும், சுடிதாராகவும் மற்றும் பாவாடையாகவும் அணியலாம். மேலும், இந்த கோடை வெயிலின் தட்ப வெப்பநிலைக்கு தளர்வான ஆடைகளையே அணிய வேண்டும்.
இதெல்லாம் அணியாதீர்கள்
கோடை காலங்களில், உடைகளுக்கு நமது உடலுக்கு பல ஆரோக்கிய கேடுகளை ஏற்படுத்தக் கூடும். உடலை ஒட்டிய ஜீன்ஸ், லெக்கீன்ஸ் மற்றும் இறுக்கமான பேன்ட்களை கோடைக்காலத்தில் அணிய கூடாது. அவை பெண்களுக்கு உகந்த ஆடைகள் கிடையாது.
கோடை காலத்தில் இதமான அதற்கு என்றால் அது பருத்தி சேலை தான். இதை தான் நமது முன்னோர்களும் பயன்படுத்தி உள்ளனர். மேலும்,வெயில்காலங்களில் நீளமான பாவாடைகளே பெண்களுக்கு வசதியாக இருக்கும். காரணம் அவை உங்கள் கால்களை முழுவதுமாக மூடி காற்றோட்டமாகவும் வைத்திருக்க உதவும் . முடிந்த வரை பருத்தி பாவாடைகளை அணிவதே சிறந்தது.