கொரோனா என்னும் கொடூரனிடம் இருந்து மீண்டு வர உலகம் போராடிக்கொண்டு இருக்கிறது .இதிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள கையை சுத்தமாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியமாக மாறியுள்ளது .இது மட்டுமில்லாமல் முகக்கவசம் அணிவது ,சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்றவை அவசியம் .
சானிடைஸர் பயன்பாடு :
சானிடைஸர்களை நம் கைகளை சுத்தமாக வைக்க பயன்படுத்துகிறோம்.ஒரு குறிப்பிட்ட அளவு பயன்படுத்தினால் அது தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்கள் ,வைரஸ்களை கொல்லும் என்பது உண்மைதான்.இது கொரோனாவிலிருந்து பாதுகாக்க பயனுள்ளதாக இருந்தாலும் அதிகப்படியான பயன்பாடு நல்ல பாக்டீரியாக்களையும் இது அளிக்கிறது .
ஆல்கஹால் சார்ந்த சானிடைஸர்கள் நோய் பரவுவதை அகற்றுவதில் பயனுள்ளதாக கருதப்படுகின்றன. இருப்பினும், அதை அதிகமாகப் பயன்படுத்துவதால் கை தோலில் அழற்சி போன்ற கடுமையான தோல் பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்ற மருத்துவ அறிக்கைகள் தகவல் தெரிவிக்கிறது.
இதை பயன்படுத்த வேண்டும் :
நாம் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள சானிடைஸர்களை ஒவ்வொரு முறையும் பயன்படுத்திய பின்னர் நல்ல மாய்ஸ்ரைஸர் கிரீம்களை பயன்படுத்த வேண்டும். இவை நம் கைகளை ஈரப்பதத்துடன் வைப்பது மட்டுமில்லாமல் சானிடைஸர்களால் ஏற்படும் தீங்கிலிருந்து பாதுகாக்கும்.
சோப்பு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும் :
நீங்கள் இருக்கும் இடத்தில சோப்பு மற்றும் தண்ணீர் இல்லையென்றால் சானிடைஸர்களை பயன்படுத்தலாம் .இந்த சோப்பு மற்றும் தண்ணீரை பயன்படுத்துவது சானிடைஸரை விட குறைவான தீங்கு விளைவிக்கும் மற்றும் எதிர்வினையை ஏற்படுத்தாது.
சிறந்த பாதுகாப்பிற்காக நீங்கள் ஆண்டிசெப்டிக் சோப்பைப் பயன்படுத்தலாம். உங்களிடம் சானிடைஸர் அல்லது சோப்பு மற்றும் தண்ணீர் இல்லாதபோது ஈரமான துடைப்பான்கள் ஒரு நல்ல மாற்றாக இருக்கும்.
தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துங்கள் :
தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த இயற்கையான மாய்ஸ்ரைஸர் இதை பயன்படுத்துவதன் மூலம் சருமத்தை சீராக வைத்திருக்கும் எந்தவித தீங்குமின்றி பாதுகாக்கும் .இது தோல் செல்கள் இடையே உள்ள இடத்தை நிரப்புகிறது மற்றும் ஈரப்பதமாக்கும் வேலையைச் செய்கிறது.
பெட்ரோலியம் ஜெல்லி :
பெட்ரோலியம் ஜெல்லி என்றும் அழைக்கப்படும் மினரல் ஆயில் சருமத்தை பாதுகாத்து தோல் தொடர்பான பிரெச்சனைகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது .உங்கள் சருமம் வறண்டு, எரிச்சலூட்டும் தோல் திட்டுகள் இருந்தால் நீங்கள் பெட்ரோலியம் ஜெல்லியைப் பயன்படுத்தலாம்.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…