இதுவரை நாம் அறிந்திராத பீர்க்கங்காயின் நன்மைகள் என்ன தெரியுமா….!!!!
பீர்க்கங்காய் நமது அருகாமையில் உள்ள சந்தைகளில் கிடைக்க கூடிய ஒன்று தான். இது நமக்கு மலிவான விலையில் கிடைக்க கூடியது. இந்த காயில் நாம் அறிந்திராத பல பயன்கள் உள்ளது. நமது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் உள்ளது.
சத்துக்கள் :
பீர்க்கங்காயில் வைட்டமின் சி, துத்தநாகம், இரும்பு, ரிபோஃப்ளோவின், மெக்னீசியம், தயாமின் போன்ற சத்துக்கள் உள்ளது. மேலும் பெப்டைட் மற்றும் ஆல்கலாயிட் என்ற இயற்கையான இரண்டு இன்சுலின்கள் இதில் உள்ளது.
பயன்கள் :
- இந்த காய் குறைந்த கலோரிகளை கொண்டது என்பதால் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
- மூலநோய்களுக்கு மாமருந்தாக பயன்படுகிறது.
- ரத்தம் மற்றும் சிறுநீரில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
- இந்த காயில் உள்ள பீட்டாகரோட்டின் பார்வை கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கிறது.
- இரத்தத்தை சுத்திகரிப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
- கல்லீரலை பாதுகாக்கிறது.
- மஞ்சள் காமாலை நோய்க்கு பீர்க்கங்காய் சாறு மருந்தாக பயன்படுகிறது.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
- பீர்க்கங்காய் சேர்த்து உணவுகளை உண்ணும் போது அதிகமாக பசி எடுக்காது.