அட இவ்வளவு நாளா தெரியாம போச்சே….!!! மிளகில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா….?
நாம் நமது சமையலில் பல வகையான மூலிகைகளை சேர்த்து சமைக்கின்றோம். அந்த வகையில் மிளகும் ஒரு மூலிகை தான். வெளிநாட்டவரும் இந்த மூலிகை பொருட்களை நமது நாட்டில் வந்து தான் வாங்கி செல்கின்றனர். இது நமது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது.
மிளகின் பயன்கள்:
தொற்று நோய்:
மிளகில் உள்ள காரத்தன்மை நமது உடலில் உள்ள கிருமிகளை அழிக்கிறது. அது மட்டுமில்லாமல் ஜுரம் போன்ற நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது.
மலட்டு தன்மை :
மிளகாய் தினந்தோறும் நமது உணவில் சேர்த்து வந்தால் ஆண்களுக்கு உள்ள மலட்டு தன்மை நீங்கும்.
புற்றுநோய் :
இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் நோய் புற்று நோய் தான். மிளகாய் அனுதினமும் உணவில் சேர்த்துக்கொண்டால், புற்று நோய் செல்கள் நமது உடலில் உருவாகுவதை தடுக்கிறது.
சளி,இருமல் :
சளி மற்றும் இருமல் தொல்லை உள்ளவர்கள் சில மிளகுகளை வாயில் போட்டு மென்று சிறிது வெந்நீரை அருந்தினால் இத்தொல்லைகள் நீங்கும்.
பற்களின் ஆரோக்கியம் :
வாயில் ஈறுகளின் வீக்கம், பல்சொத்தை, கிருமிகள் உற்பத்தி போன்றவற்றை மிளகு ஒரு சிறந்த மருந்தாக உள்ளது.
பொடுகு :
தலையில் பொடுகு தொந்தரவு உள்ளவர்கள் தினமும் சில மிளகுகளை மென்று வந்தால் பொடுகு தொந்தரவில் இருந்து விடுதலை பெறலாம்.
இரத்த அழுத்தம் :
இரத்த அழுத்தத்தை தடுக்க சீரான நிலையில் வைத்து கொள்ள தினமும் சில மிளகுகளை மென்று தின்பது நல்லது.