வீட்டை துடைக்கும் துடைப்பத்தை இப்படி மட்டும் வைக்காதீர்கள்..!

Published by
Sharmi

வீட்டை துடைக்கும் துடைப்பத்தை பற்றிய பத்து குறிப்புகளை பற்றி இன்று தெரிந்து கொள்ளலாம்.

வீட்டை துடைக்கும் துடைப்பத்திற்கு என்று பல்வேறு ஐதீகம் உள்ளது. சுத்தப்படுத்தும் பொருள் தானே துடைப்பம் என்று இதில் அலட்சியம் காட்டாதீர்கள். மகாலெட்சுமி வாசம் செய்யும் 108 பொருட்களில் துடைப்பமும் ஒன்று. அதனால் இதனை எப்படி பயன்படுத்துவது? என்னெவெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

  1. தினமும் காலையில் முதல் வேலையாக வீடு பெருக்குவது என்பது இயல்பான செயல். ஆனால் வீட்டில் அனைவரும் எழுந்த பின்னரே வீடு பெருக்க வேண்டும். வீட்டில் ஒருவர் தூங்கி கொண்டிருக்கும் பொழுது வீடு பெருக்க கூடாது. வீட்டில் சாப்பிடும் பொழுதும் பெருக்க கூடாது.
  2. வீட்டில் பெருக்கும் பொழுது பெரிய மேஜை அல்லது பொருட்கள் ஏதேனும் இருந்தால் அதனை நகர்த்தியோ அல்லது அதற்கு அடியில் உள்ள குப்பைகளையும் வெளியே கொண்டு வந்து பெருக்க வேண்டும். குப்பைகளை அள்ளும் போது உள்ளிருந்து வெளிப்புறமாக அள்ள வேண்டும்.
  3. முக்கியமாக துடைப்பத்தை கையில் வைத்து கொண்டு மற்றவர்களிடத்து பேசுவது தவறு. யாரிடமும் பேச வேண்டுமானால் கைகளை கழுவிய பின்னரே பேச வேண்டும். அதேபோல் துடைப்பம் கையில் இருக்கும் பொழுது சமையல் செய்வது, யாரையும் தொடுவது, குழந்தைகளை தொடுவது, சமையல் பொருட்களை தொடுவது போன்ற செயல்களை செய்ய கூடாது. கைகளை கழுவிய பின்னரே எதையும் செய்ய வேண்டும்.
  4. வீட்டை விட்டு வெளியே யாரும் சென்றால், அவர் சென்ற உடனேயே வீட்டை பெருக்குவது, குளிப்பது, வாசல் கூட்டி பெருக்குவது இது போன்ற செயல்களை செய்ய கூடாது. அது அமங்கலமான செயல்கள் ஆகும். அதனால் எப்போதும் ஒருவர் வீட்டை விட்டு வெளியே சென்றால் சற்று நேரம் சென்றவுடன் வேலைகளை துவங்குங்கள்.
  5. துடைப்பத்தை படுக்க வைத்திருப்பதும், மற்றவர் பார்வை படும் படி வைத்திருப்பதும் தவறாகும். இதனால் வீட்டு பெண்களுக்கு கோவம்  அதிகரிக்கும். எனவே எப்போதும் துடைப்பத்தை நேராக நிமிர்த்தி இருப்பது போல் வையுங்கள்.
  6. துடைப்பத்தை ஏதேனும் ஆணியில் மாட்டி வைத்திருக்கிறீர்கள் என்றால் நம் உயரத்தை விட குறைவாக ஆணி அடித்து மாட்டி வைக்க வேண்டும். நம்மை விட உயரமான இடத்தில் துடைப்பத்தை வைக்க கூடாது.
  7. துடைப்பத்தை வைத்து பெருக்கும் பொழுது துடைப்பம் யார் மீதும் பட்டுவிடாமல் பார்த்து கொள்ளுங்கள். மேலும், முடிகள் ஏதும் இருந்தால் அதனை கையில் எடுத்து வெளியேற்றி விடுங்கள். இல்லையேல் துடைப்பத்தில் சிக்கி கொள்ளும். அதனை அப்படியே வைத்து விட கூடாது. அதனால் முடிகள் இருந்தால் அவற்றை தனியாக கையில் எடுத்து அப்புறப்படுத்திவிடுங்கள்.
  8. துடைப்பத்தை எப்போதும் ஒருவர் தாண்டி செல்லக்கூடாது.
  9. வீட்டை சுத்தப்படுத்தும் பொழுது பூஜை அறையையும் துடைப்பத்தை கொண்டு சுத்தப்படுத்த கூடாது. பூஜை அறையை எப்பொழுதும் அதற்கென ஒரு துணியை வைத்து சுத்தப்படுத்துங்கள். ஒருவேளை பெரிய பூஜை அறை இருந்தால் பூஜை அறைக்கென்று தனி துடைப்பத்தை வைத்து கொள்ளுங்கள்.
  10. துடைப்பத்தை வைத்து பெருக்கும் பொழுது துடைப்பம் உள்ளங்கையில் அழுத்தி இருக்க வேண்டும். நின்று கொண்டு பெருக்காமல் சற்று உடலை சாய்த்து குனிந்து பெருக்க வேண்டும். இதன் மூலம் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

Recent Posts

17 சுரங்கபாதைகள்., நெருங்கிய பாதுகாப்பு படை! பாக். ரயில் கடத்தலின் தற்போதைய நிலை…

17 சுரங்கபாதைகள்., நெருங்கிய பாதுகாப்பு படை! பாக். ரயில் கடத்தலின் தற்போதைய நிலை…

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…

2 hours ago

விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு எப்போது? என்னென்ன பாதுகாப்பு வசதிகள்?

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…

4 hours ago

வெறிநாய் கடியால் பறிபோன உயிர்? கோவையில் தற்கொலை செய்துகொண்ட வடமாநில தொழிலாளி!

கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…

4 hours ago

எக்ஸ் சைபர் அட்டாக் : “செஞ்சது இவங்க தான்?” உக்ரைனை சுட்டி காட்டிய மஸ்க்!

சான் பிரான்சிஸ்கோ : பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் இருந்து…

5 hours ago

400க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ரயில் ஹைஜேக்… பாகிஸ்தானில் உச்சக்கட்ட பதற்றம்.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா - பெசாவருக்கு ஜாபர் விரைவு ரயில் 450 பேருடன் சென்றது.…

6 hours ago

அடுத்த 2 மணி நேரத்திற்கு 24 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்.!

சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

6 hours ago