தயிருடன் இந்த உணவுப்பொருட்களை மறந்தும் சாப்பிட வேண்டாம்..! இது ஆபத்தை ஏற்படுத்தும்..!
உணவுப்பொருட்கள் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியவை. சத்தான உணவு பொருட்கள் நாம் உட்கொள்வதால் நமக்கு சக்தியை, ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதேபோல் தயிருடன் ஒரு சில உணவுப்பொருட்களை சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும். அதுபோன்ற உணவுப்பொருட்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சீஸ்: அனைவருக்கும் பிடித்தமான சீஸை தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது.
மீன்: இயற்கையாகவே மீன் சூடான பண்பு உடையது. இதனுடன் குளிர்ச்சியான பண்புடைய தயிரை சேர்த்து உண்டால் அசிடிட்டி உண்டாகும். மேலும், வயிறு உப்புசம், வாந்தி, வயிற்றுவலி, செரிமான பாதிப்பு, வாய்வுத்தொல்லை போன்றவை ஏற்படுத்தும்.
எண்ணெய் உணவுப்பொருட்கள்: எண்ணெய்யில் பொரித்தெடுத்த உணவுப்பொருட்களுடன் தயிரை சேர்த்து சாப்பிட வேண்டாம். இது வயிற்று பிரச்சனை, செரிமான பாதிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும்.
சிக்கன்: சிக்கன் சமைக்கும் பொழுது அதனுடன் தயிர் உபயோகப்படுத்துவது செரிமானத்தில் பாதிப்பை கொடுக்கும்.
பேரீச்சம் பழம்: பேரீச்சம் பழத்துடன் தயிர் சேர்த்து சாப்பிட கூடாது.
வாழைப்பழம்: வாழைப்பழம் சாப்பிடும் பொழுது அதனுடன் தயிர் சேர்த்து கொள்ள கூடாது. அதனால் வாழைப்பழம் சாப்பிட்டு 2 மணிநேரம் கழித்து தயிர் சாப்பிடுவது நல்லது.
மாம்பழம்: மாம்பழத்துடன் தயிர் சேர்த்து சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால், ஃபுட் பாய்சன் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் சரும பாதிப்புகளும் ஏற்படலாம்.
வெங்காயம்: பலரும் பிரியாணிக்கு உகந்த ஒரு சைடிஷாக வெங்காய பச்சடியை கூறுவார்கள். வெங்காயம் மற்றும் தயிர் சேர்த்து சாப்பிடுவது நன்றாகவே இருந்தாலும் அது செரிமான பாதிப்பு, வாய்வுத்தொல்லை, வாந்தி, அசிடிட்டி ஏற்படுத்தும்.
பால்: சில நேரங்களில் புளித்த தயிருடன் பால் சேர்த்து பயன்படுத்துவார்கள். அது முற்றிலும் தவறு. அதுபோல் செய்வதால் அசிடிட்டி பாதிப்பு ஏற்படலாம்.