எங்கள் வான்வெளியில் உங்கள் விமானம் பறக்க கூடாது – ரஷ்யாவுக்கு அடுத்தடுத்து தடை!

Default Image

தங்கள் நாட்டு வான்வெளியை ரஷ்ய விமானங்கள் பயன்படுத்த தடை விதித்து டென்மார்க் அரசு உத்தரவு.

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை மற்றும் ராணுவ படைகளை கொண்டு கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்த தாக்குதலில் உக்ரைன் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. மேலும் தலைநகர் கீவ்-ஐ தன் வசமப்படுத்த போரை தீவிரப்படுத்தியுள்ளது. ரஷ்ய படைகளை எதிர்த்து, உக்ரைனும் தங்களால் முடிந்த வரை போராடி வருகிறது.

உக்ரைன் அதிபர் கோரிக்கையை ஏற்று அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் ராணுவ நிதி உதவி, உணவு, மருந்துகள், டாங்கிகள் மற்றும் ஆயுதங்களை உள்ளிட்டவைகளை வழங்கி வருகிறது. ரஷ்யாவின் விடாப்பிடியான மோதல் போக்கை கண்டித்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல், ரஷ்ய விமானங்கள் தங்கள் நாட்டின் வான்வெளி தளத்தில் பறக்கக்கூடாது என்று உக்ரைனை சுற்றியுள்ள நாடுகள் ஏற்கனவே தடை விதித்துள்ளது. இந்த நிலையில், தங்கள் நாட்டு வான்வெளியை ரஷ்ய விமானங்கள் பயன்படுத்த தடை விதித்து டென்மார்க் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. டென்மார்க்கை தொடர்ந்து ரஷ்ய விமானங்கள் தங்கள் வான்வெளியில் பறக்க தடை விதித்து அயர்லாந்து மற்றும் பெல்ஜியம் அரசும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதுபோன்று ரஷ்யாவுக்கு பல நாடுகள் அடுத்தடுத்து பல்வேறு தடைகளை விதித்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்