காலையில் வெறும் வயிற்றில் இதை எல்லாம் சாப்பிட்டு விடாதீர்கள்….!

Default Image

காலை உணவு மனிதனுக்கு மிகவும் முக்கியம் என்பது அனைவருக்குமே தெரிந்தது தான். ஏனென்றால் காலை நேர உணவை தவிர்ப்பதன் மூலமாக உடலில் பல நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாகிறது. எனவே தான் காலை நேரத்தில் ராஜா போல சாப்பிட வேண்டும் என கூறுகிறார்கள்.

வேலைக்கு செல்ல வேண்டும் அல்லது அவசரமான ஏதாவது ஒரு காரணங்களைக் கூறி காலை உணவை தவிர்ப்பது நமது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். அதே சமயம் அவசரமான நேரம் என்பதற்காக காலையில் ஏதேனும் ஒன்றைச் சாப்பிடலாம் என்று கிடையாது, காலை நேரத்தில் சில உணவுப்பொருட்களை சாப்பிடக்கூடாது. அவை என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தக்காளி

tomato

தக்காளி நமது ஆரோக்கியம் மற்றும் அழகுக்கு மிகவும் உகந்தது. ஆனால் இந்த தக்காளியை காலையில் வெறும் வயிற்றில் எதுவும் சாப்பிடாமல் இருக்க கூடிய நேரத்தில் சாப்பிட கூடாது. ஏன் என்றால் இந்த தக்காளியில் அமிலத்தன்மை அதிக அளவில் உள்ளது. இதன் காரணமாக நமது வயிற்றில் புண்கள் ஏற்படுவதுடன், வயிற்று வலி ஏற்படுவதற்கும் காரணமாக அமையும்.

குளிர்பானம்

குளிர்பானம் அதிக அளவில் அமில தன்மை கொண்டது. எனவே இது நமது உடலின் ஆரோக்கியத்துக்கு நல்லது அல்ல. எனவே வெறும் வயிற்றில் இந்த குளிர்பானங்களை உட்கொள்ளும் பொழுது, வயிற்றில் அமிலத்தின் அளவு அதிகரித்து, கடுமையான வயிற்றுவலி மற்றும் வயிற்றுப்புண்கள் ஏற்படுவதற்கு காரணமாகிறது.

சாலட்

காலை நேரத்தில் காய்கறிகளையும், பழங்களையும் வைத்து சாலட் செய்து சாப்பிடுவது நல்லது தான். ஆனால் அதை வெறும் வயிற்றில் உட்கொள்வது தவறு. இது நமது ஆரோக்கியத்தை பாதிக்கும். நமது செரிமானத்தை பாதிக்கும். எனவே காலையில் வெறும் வயிற்றில் அமிலத்தன்மை அதிகம் ஏற்படுவதற்கு காரணமான உணவுகளை சாப்பிடாமல் இருப்பது நல்லது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்