சாப்பிடும் போது தண்ணீர் குடிக்க கூடாது…! ஏன் தெரியுமா…?
சாப்பிடும் போது ஏன் தண்ணீர் குடிக்கக் கூடாது என்பது பற்றி பார்ப்போம்.
நாம் அனைவருமே பொதுவாக சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது வழக்கம். ஆனால்,இந்த பழக்கம் நல்லதா? என்று கேட்டு பார்த்தால், அது முற்றிலும் தவறானது. தற்போது இந்த பதிவில், சாப்பிடும் போது ஏன் தண்ணீர் குடிக்கக் கூடாது என்பது பற்றி பார்ப்போம்.
சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால், பசி எடுக்காது. அதே போல், சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடித்தால் வயிறு நிறைந்து விடும். சாப்பிட்டு முடித்தவுடன் தண்ணீர் குடித்தால், செரிமான பிரச்சனைகள் ஏற்படும் என கூறுகின்றனர்.
பொதுவாக ஒரு மனிதன் ஒரு நாளைக்கு கண்டிப்பாக 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதை பகுத்து எப்படி வேண்டுமானாலும் குடிக்கலாம். ஆனால், சாப்பாட்டுக்கு முன் தண்ணீர் குடித்தால், வயிறு நிறைந்து விடும் என்பது உண்மை தான்.
சாப்பிடும் போது இடை இடையே தண்ணீர் குடிப்பது ஆபத்தானது தான். அப்படிப்பட்டவர்களுக்கு, தண்ணீர் குடிப்பது சாப்பாட்டை உள்ளே அனுப்பப் கூடிய ஒரு அழுத்தமாக தான் தண்ணீர் செயல்படுகிறது. இவ்வாறு செய்யும் போது, தொண்டை மற்றும் குடல் சம்பந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். எனவே இந்த பழக்கம் உள்ளவர்கள் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.
சாப்பிட்டு முடித்த பின் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமானது. அவ்வாறு செய்யும் போது, தொண்டை மற்றும் உணவுக் குழாயில் ஒட்டியுள்ள உணவு துகள்கள் செரிமான பையை சென்று விடுகிறது.