நடிகர் பார்த்தீபன் கோலிவுட் சினிமாவில் திறமை மிக்க இயக்குனர்களில் ஒருவர்.இவர் இயக்கி,நடித்த படம் “ஒத்த செருப்பு” தற்போது வெளியாகி 2 வாரங்கள் ஆகிறது.இந்நிலையில் இந்த படம் பல திரையரங்குகளில் இருந்து தூக்க படுவதாக பார்த்தீபன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் நேற்று பிலிம் சேம்பரில் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது.இந்த நிகழ்ச்சியில் ராதா ரவி மற்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டார்.இது குறித்து நடிகர் பார்த்தீபன் பேசுகையில் , படம் 20 ந் தேதிக்கு முன்பு வெளியானால் தான் ஆஸ்கருக்கு அனுப்பலாம் என்று நினைத்து படத்தை வெளியிட்டேன் என்றும் இந்த படத்தை காண தற்போது பார்வையாளர்கள் திரையரங்கிற்கு வரும் போது படத்தில் காட்சிகளை குறைக்கிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.பெரிய படங்கள் வந்தவுடன் சிறிய படங்களை திரையரங்குகளில் இருந்து தூக்குவது ஒரு கலைஞனை சாகடித்து அவனுக்கு போடும் மாலையை இன்னொரு மணமகனுக்கு போடும் மாலைக்கு சமமானது என்று கூறியுள்ளார்.
பின்பு இந்த கூடத்தில் கந்து கொண்ட ராதா ரவி ,”நல்ல கலைஞனை நாம் தெரிந்தே சாகடித்து விட கூடாது. பார்த்தீபன் திரைத்துறை இருக்கும் வரை பேசப்படுவர். கருணை கொலை அனுமதிக்கலாம் என்று காந்தி கூறியிருக்கிறார். ஆனால் நாம் பார்த்தீபனை கொன்று விடக்கூடாது. திரையரங்க உரிமையாளரின் காலில் விழுந்து கேட்டு கொள்கிறேன். படத்தை மாற்ற வேண்டாம்” என்று கூறியுள்ளார்.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையில் டெல்லி…