கொரோனா வைரஸ் உள்ளதை நம்பாதீர்கள், ATM மிஷினின் பட்டன்களை நக்கிய மனிதன்!

கொரோனா வைரஸ் உள்ளதை மக்கள் நம்புவதாகவும், ஆனால் தான் நம்பவில்லை வேண்டுமென்றால் நிரூபிக்கிறேன் என கூறி ATM மிஷினில் பட்டன்களை நக்கும் வீடியோ இணையதள பக்கத்தில் வைரலாகி உள்ளது.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் ஒரு வருட காலமாக தொடர்ந்து பரவி வரும் நிலையில், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமூக இடைவெளிகளை பின்பற்றி மக்கள் விழிப்புணர்வுடன் ஒருவரை ஒருவர் தொடாமல் இருக்கும் நிலையில் இங்கிலாந்தில் உள்ள மனிதன் ஒருவர் ATM மிஷினை நக்கியுள்ளார்.
அதன் பின் கேமராவை பார்த்து கொரோனா இருப்பதை நம்புகிறீர்களா? அப்படியானால் நீங்கள் தான் முட்டாள்கள், அரசாங்கம் உங்களை ஏமாற்றுகிறது என கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி சர்ச்சையாகியதை அடுத்து, அந்த மனிதனின் முகம் சரியாக தெரியாததால் தொடர்ந்து அது யார் என விசாரணை நடந்து வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025