கார்ப்பரேட் கூட்டுப்பணியாளர்களாக செயல்பட வேண்டாம் – இயக்குனர் வெற்றிமாறன்
போராட்டம் என்பது கேட்காத மக்களின் வெளிப்பாடே. ஆட்சி அதிகாரம் அதிகாரத்திற்கு வழங்கப்படுகிறது மக்களால் அரசு.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து, தலைநகர் டெல்லியில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் கடந்த குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். இதில் பெரும் சர்ச்சை வெடித்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிற நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில், ‘போராட்டம் என்பது கேட்காத மக்களின் வெளிப்பாடே. ஆட்சி அதிகாரம் அதிகாரத்திற்கு வழங்கப்படுகிறது மக்களால் அரசு. அது மக்களின் நலன் காக்க வேண்டும். கார்ப்பரேட் கூட்டுப்பணியாளர்களாக செயல்பட வேண்டாம். தேசத்தின் ஆன்மாவை பாதுகாக்க விவசாயிகள் முயற்சி செய்கிறார்கள். உரிமைக்காக போராடுவதும் போராட்டத்தை ஆதரிப்பதும் ஜனநாயகம்.’ என பதிவிட்டுள்ளார்.