உங்கள் வீட்டிலுள்ள மாவுகளையெல்லாம் பூச்சிகள் நாசமாக்குகிறதா…? அப்போ இந்த வழிமுறைகளை ட்ரை பண்ணுங்க…!

Default Image

பெரும்பாலும் பலரது சமையலறையில் இருக்கக்கூடிய மாவுகளை பூச்சிகள் அழிப்பது சாதாரணமாக நடக்கக் கூடிய ஒன்றாக உள்ளது. இதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் நீங்கள் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? இன்று உங்கள் மாவில் பூச்சிகள் வராமல் சேமிப்பது எப்படி? மாவை நீண்ட நாட்கள் கெட்டு போகாமல் பாதுகாப்பது எப்படி? என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

அலுமினிய கொள்கலன்

பெரும்பாலும் மாவு வாங்கியதும் அப்படியே சணல் பைகள் அல்லது பிளாஸ்டிக் பைகளில் வைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அதில் உள்ள ஈரப்பதம் காரணமாக இந்த மாவின் தரம் பாதிக்கப்படும். எனவே நீண்ட நாட்களுக்கு இந்த மாவை நாம் சேமித்து வைக்க முடியாது. அதே போல பிளாஸ்டிக் பைகள் அல்லது சணல் பைகளை பூச்சிகள் ஈஸியாக துளையிட்டு உள்ளே சென்றுவிடும்.

aluminiyam

இதனால் நமது மாவு பாதிக்கப்படும். எனவே மாவை சேமித்து வைக்கும் பொழுது அலுமினிய கொள்கலன் அல்லது மூடக்கூடிய ஒரு பாத்திரத்தில் வைத்து மாவை சேமித்து வைக்க வேண்டும். அதற்கு முன்பதாக அந்த பாத்திரத்தை நன்றாக கழுவி வெயிலில் உலர்த்தி விட்டு, அதன் பின்பு இந்த மாவை இதனுள் கொட்டி உபயோகித்தால் நீண்ட நாட்களுக்கு மாவு கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும்.

உப்பு

நீங்கள் மாவை நீண்ட காலத்திற்கு சேமித்து வைக்க வேண்டும் என்று விரும்பினால், உங்கள் மாவில் உப்பு சேர்த்து கொள்ளுங்கள். மாவு கெட்டுப்போகாமல் இருப்பதற்காக தான் உப்பு சேர்க்கிறோம். அதாவது நீங்கள் சேமித்து வைக்கக்கூடிய கொள்கலனில் 10 கிலோ மாவு இருந்தால் அதில் நான்கு முதல் ஐந்து ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலக்கி அப்படியே வைத்துவிட வேண்டும். இது மாவு நீண்ட நாள் கெட்டுப்போகாமல் இருக்க உதவுவதுடன், பூச்சிகளில் இருந்து பாதுகாக்கவும் உதவும்.

காய்ந்த மிளகாய்

மாவில் உப்பு சேர்ப்பது எப்படி என யோசிப்பவர்களாக இருந்தால், உப்பு சேர்க்க வேண்டாம். உங்கள் மாவில் 10- 15 காய்ந்த மிளகாய் போட்டு நன்றாக கிளறி வைத்து விடவும். இது மாவில் பூச்சிகள் வராமல் இருப்பதற்கு பெரிதும் உதவுகிறது. அதே போல வளைகுடா இலைகளையும் இந்த பூச்சிகளை அகற்றுவதற்கான சிறந்த தீர்வாக கருதப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்