“திமுக ஒரு தீய சக்தி”கருணாநிதி குடும்பம் ஆசியாவிலேயே பணக்கார குடும்பம்..!! அமைச்சர் சாடல்..!!

Default Image

ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்கார குடும்பம் என்றால் அது கருணாநிதி குடும்பம் தான் என்றும் தனது சொத்து கணக்கை ஸ்டாலின் தெரிவிப்பாரா என்றும் அமைச்சர் டி.ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

சென்னையில் சி.பா.ஆதித்தனாரின் 114-வது பிறந்தநாளையொட்டி, ஆதித்தனார் சாலையில் உள்ள அவரது சிலைக்கு மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ,

Image result for அமைச்சர் டி.ஜெயக்குமார் ஸ்டாலின்தி.மு.க.வை பொறுத்தவரையில் அவர்களுக்கு அரசியல் பண்பாடு கிடையாது. அரசியல் நாகரிகமும் கிடையாது. ஒரு பகைமை உணர்ச்சியுடன், ஒரு ஆதங்கத்துடன் ஆட்சி கட்டிலில் ஏற முடியவில்லையே என்ற பதவி வெறியுடன் இருப்பதை மு.க.ஸ்டாலினின் செயல்பாட்டை வைத்து உணர முடியும்.என்றார்.அ.இ.அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது, தொகுதியில் அரசு விழா நடக்கும் போது எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பெயரை அவர்கள் போடுவது கிடையாது. ஆனால் இன்றைக்கு நாங்கள் அவர்களுக்கு உரிய மரியாதையை தந்திருக்கிறோம். ஒரு எதிர்க்கட்சி தலைவர், ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையில் மு.க.ஸ்டாலினுக்கு உரிய மரியாதை தரப்பட்டு இருக்கிறது. அவரது பெயரை பெரியதாக போட்டு இருக்கிறோம். இதற்கு பிறகு என்ன மரியாதை வேண்டும். .எங்களை பொறுத்தவரையில் அரசியல் மாண்பை கடைப்பிடித்து இருக்கிறோம். அதை உணர்ந்து அவர் விழாவில் கலந்து கொள்வதும், கலந்து கொள்ளாததும் அவரது விருப்பம். நாங்கள் கட்டாயப்படுத்த முடியாது என்றார்.
Image result for சர்க்காரியா கமிஷன்பல நேரங்களில் நானும் ரவுடி தான் என்ற காமெடி போல தான் மு.க.ஸ்டாலின் நடந்து கொள்கிறார். அவர் ஏதோ உத்தமபுத்திரன் போல பேசுகிறார். தி.மு.க. மீது ஆயிரக்கணக்கான ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது.சர்க்காரியா கமிஷன் ஊழல் எல்லோருக்கும் தெரியும். பூச்சி மருந்து ஊழல், வீராணம் ஊழல் என ஊழலின் மொத்த உருவமே தி.மு.க. தான். வரலாறு இதை மறக்காது. மறைந்தஅம்மா அவர்கள் திமுகவை தீய சக்தி என்று குறிப்பிட்டார்கள். தி.மு.க. ஒரு தீயசக்தி. அவரின் குடும்ப சொத்து என்ன?. அதை கணக்கு போட சொல்லுங்கள். ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்கார குடும்பம் என்றால் அது கருணாநிதி குடும்பம் தான். இந்த பணம் எங்கிருந்தது வந்தது. இதனை ஸ்டாலின் கணக்கு போட்டு சொல்வரா?

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்