விடுபட்ட 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த கோரி டெல்லியில் திமுக மனு!!
- 21 தொகுதிகளில் 18 தொகுதிகளில் மட்டுமே இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
- டெல்லியில் ஆர்.எஸ். பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் திருச்சி சிவா ஆகியோர் தலைமை தேர்தல் ஆணையரை நேரில் சென்று சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
நாடாளுமன்றத்திற்கான தேர்தல் தேதிகள் சில தினங்களுக்கு முன்பு தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் அதே நேரத்தில் தான், தெரிவு செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் மற்றும் பதவி காலத்தில் தவறிய திருவாரூர் தொகுதி எம்எல்ஏ கருணாநிதி மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ இரண்டும் தற்போது காலியாக உள்ளது. மேலும் ஓசூர் தொகுதி எம்எல்ஏ சிறை தண்டனை பெற்றதால் அத்தொகுதியும் காலியாக அறிவிக்கப்பட்டது.
மொத்தம் 21 தொகுதிகளில் 18 தொகுதிகளில் மட்டுமே இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் 3 தொகுதிகள் வழக்கு நிலுவையில் உள்ளதால் பின்னர் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதையடுத்து இன்று டெல்லியில் ஆர்.எஸ். பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் திருச்சி சிவா ஆகியோர் தலைமை தேர்தல் ஆணையரை நேரில் சென்று சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
அதில் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை தள்ளுபடி செய்து மீதமுள்ள 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் உடனடியாக நடத்த உத்தரவிடும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.