திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார்…..!!!!
- திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார்.
தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில், பல்வேறு கட்சிகளும் தங்களது தொகுதிகளில் பிரச்சாரத்தை துவங்கி உள்ளனர். துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இந்நிலையில், கதிர் ஆனந்த் காட்பாடியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். பின் அவர் கட்சியினருடன் இணைந்து வேலூர் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார்.
இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் திமுக அமோக வெற்றி பெறும் என்றும், இதன்மூலம் மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள ஆட்சி அகற்றப்படும் என்றும் கூறியுள்ளார்.