பணப்பட்டுவாடா புகார் காரணமாக கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வேலூர் தொகுதிக்கு மட்டும் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனை அடுத்து கடந்த 5 ஆம் தேதி இந்த தொகுதியில் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் ஏசி சண்முகமும், அவரை எதிர்த்து திமுக சார்பில் காதிர் ஆனந்தும் போட்டியிட்டனர்.
முதலில் அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகம் முன்னிலையில் இருந்ததால் அதிமுக தொண்டர்கள் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி வந்தனர். அதன் பின்பு சற்று நேரத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலையில் வந்தார். பின் இருவரும் மாற்றி மாற்றி முன்னிலை வகிக்க கடைசி நேரத்தில் யார் ஜெயிப்பார் என பரப்பரப்புடன் காணப்பட்டது அந்த தேர்தல் களம்.
ஒரு கட்டத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தனக்கான வலுவான இடத்தை பிடித்துக்கொண்டார். அதன் பின்பு கணக்கெடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகத்தை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் எம்பியாக பதவி ஏற்றுள்ளார். இதனால் திமுக தொண்டர்கள் மற்றும் அமைச்சர்கள் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…