“திமுக அடாவடித்தனம்,பிஜேபியுடன் கூட்டு” இரட்டை வேடம் போடுகிறது..!!
அடாவடி தி.மு.க. ஆட்சிக்கு வர முடியாது – முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி கடும் தாக்கு…
அடாவடி தி.மு.க. ஆட்சிக்கு வரக்கூடாது என்று மக்கள் அனைவரும் விரும்புகிறார்கள் என்று சைதாப்பேட்டையில்நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி பேசினார்.
அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு, தென்சென்னை தெற்கு மாவட்டம், சைதாப்பேட்டை பகுதி கழகம் சார்பில் வி.ஜி.பி. சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய அவர் , முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அண்ணாவின் ஆட்சியை, புரட்சித்தலைவரின் ஆட்சியை, அம்மாவின் ஆட்சியை மக்களுக்கு தந்து கொண்டு இருக்கிறார்கள். அம்மாவின் மறைவுக்கு பின், இந்த ஆட்சிக்கு கெட்ட பெயர் வர வேண்டும் என்பதற்காகவே, இதுவரை இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலே இதுவரை இத்தனை போராட்டங்கள் நடந்தது இல்லை.
32 ஆயிரம் போராட்டங்களை எதிர்கட்சிகள் நடத்தியுள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு. 32 ஆயிரம் போராட்டங்களையும் முறியடித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திறம்பட ஆட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார். ஒன்றரை ஆண்டுகளாக ஆட்சியை அசைத்து கூட பார்க்க முடியவில்லை என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் , திமுகவின் புதிய தலைவர், ஒரு வாரத்திற்கு முன், காவி உடை தமிழ்நாட்டிற்குள் நுழையக் கூடாது. பாரதீய ஜனதா தமிழ் நாட்டில் வரக்கூடாது என்று சொன்னவர் பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்தை முதல் ஆளாய் தெரிவிக்கிறார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மத்திய அரசை பார்த்து பயப்படுகிறார் என்று சொன்னவர். எதற்கு முதல் ஆளாய் பிரதமருக்கு ஸ்டாலின் வாழ்த்து சொல்கிறார். ஒருபுறம், பாரதிய ஜனதா தலைவர்களை, கனிமொழி சந்தித்து பேசுவது, ஒருபுறம் எதிர்ப்பது போல் நடிப்பது என, இரட்டை வேட அரசியலை தி.மு.க செய்கிறது என்று கடுமையாக விமர்சித்தார்.
அவர் பேசும் போது தமிழக மக்கள் தி.மு.க ஆட்சிக்கு வரவே கூடாது என நினைக் கிறார்கள் ஏன் தெரியுமா? கேவலம், ஐம்பது ரூபாய் பிரியாணிக்கு, தி.மு.க.வினர் ஒரு கடையை அடித்து உடைத்து, கடையில் இருப்பவர்களை மண்டையை உடைத்தது விருகம்பாக்கத்தில் நடந்தது. இதேபோல், பெரம்பலூரில், தி.மு.க.வில் பதவி யிலிருந்த ஒருவர், கடன் வாங்கிய ஒரு பெண்ணை, தகாதமுறையில் காலால் எட்டி உதைத்து, அடித்து, அடாவடித்தனம் செய்கிறார்.இப்படி அடாவடித்தனம் செய்யும் தி.மு.க.வை, தமிழக மக்கள் விரும்புவார்களா? தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும் என மக்கள் யாரும் விரும்பவில்லை.என்று திமுகவை பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
DINASUVADU