2018 தமிழக பட்ஜெட்:பட்ஜெட்டை உரையைப் புறக்கணித்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு!
தி.மு.க. உறுப்பினர்கள் பட்ஜெட்டை உரையைப் புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர்.
சட்டப்பேரவைக்கு தி.மு.க. உறுப்பினர்கள் கறுப்புச் சட்டை அணிந்து வந்திருந்தனர். துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டைத் தாக்கல் செய்யத் தொடங்கியவுடன் தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் பட்ஜெட் உரையைப் புறக்கணித்து வெளிநடப்புச் செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு, தமிழக அரசு போதிய அழுத்தம் கொடுக்கத் தவறியதைக் கண்டிக்கும் வகையில் பட்ஜெட்டை புறக்கணித்து வெளிநடப்புச் செய்ததாக தெரிவித்தார். மாநிலங்களவையிலும் தி.மு.க. உறுப்பினர்கள் கறுப்புச்சட்டை அணிந்துதான் செல்லவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.