ஒரு தொகுதிக்கு எவ்வளவு செலவு?? விஜயகாந்த் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பின் பின்னணி !!
- நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது.
- தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று அவரது இல்லத்தில் சந்தித்த அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் செலவு பற்றி பேசி உள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில் அதிமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிகவும் இடம்பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு 4 சீட்டுகள் மட்டுமே கொடுத்திருந்தார்கள் முழு மனதாக, முழுமூச்சாக வேலை செய்ய ஒப்புக் கொண்டிருப்பதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை தேமுதிக தலைவர் விஜயகாந்தை அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது…
தேர்தலில் முக்கிய பங்கு வகிப்பது, அதற்காக செய்யப்படும் செலவு. போஸ்டர், பேனர், டிவி விளம்பரம், போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் தொண்டர்களுக்கான செலவு என கிட்டத்தட்ட குறைந்த பட்சம் ஒரு தொகுதிகக்கு 12 கோடி ரூபாய்க்கு மேலாவது ஆகும் என பொது வெளியில் விவாதிக்கப்படுகிறது! தேமுதிக தரப்பு 30 கோடி ரூபாய் வரை வழங்க பேசப்பட்டுள்ளதாக தெரிகிறது