தேமுதிக கட்சிக்கு ஏற்பட்ட நிலைமை !
தமிழகத்தில் 2011 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 29 இடங்களில் வெற்றிபெற்ற தேமுதிக பிரதான எதிர்கட்சியானது.அதன் பின் நடந்த தேர்தல்களில் தொடர் பின்னடைவை சந்தித்த தேமுதிக 2016 சட்டமன்ற தேர்தலில் எந்த இடங்களிலும் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில்,தற்போது நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் எந்த இடங்களிலும் வெற்றி பெறாத நிலையில் அக்கட்சியின் வாக்கு வங்கி 2.39% லிருந்து 2.19% ஆக குறைந்துள்ளது.இதனால் தேமுதிக வானது கட்சி அந்தஸ்தையம்,முரசு சின்னத்தையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.