தீபாவளிக்கு "பிகில்" உடன் மோதும் "கைதி"..!
இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் “பிகில் ” இப்படத்தில் நயன்தாரா விவேக் ஆகிய பலர் நடித்துள்ளனர்.படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்தய்மெண்ட் தயாரித்துள்ளது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
The day we were all waiting for Our #Thalapathy’s #Bigil will hit screens worldwide on 25th October 2019 #PodraVediya #BigilDiwali @Ags_production @actorvijay @Atlee_dir @arrahman #Nayanthara @Screensceneoffl @SonyMusicSouth pic.twitter.com/CHnuJbJRwD
— Archana Kalpathi (@archanakalpathi) October 17, 2019
இப்படம் வருகிற 25-ம் தேதி தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இதை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. “பிகில் ” திரைப்படத்தின் கதை என்னுடையது எனக் கூறி கே.பி.செல்வா என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டு இருந்ததால் தீபாவளிக்கு படம் வெளி வருமா..?வராத என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.
இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் சற்று நேரத்திற்கு முன் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக 25-ம் தேதி வெளியாகும் என அறிவித்து உள்ளது.