தீபாவளியை தித்திக்க வைக்கும் ஆல் ஃபேவ்ரட் குண்டு குண்டு குலாப் ஜாமுன்…!!குட்டீஸ்களை குதுகலப்படுத்துங்கள்..!!
நாடு முழுவதும் நவ.6 தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மக்கள் அனைவரும் பண்டிகையை கொண்டாட தயார் ஆகி வருகின்றனர்.புத்தாடை,பட்டாசு என்று தீபாவளியை பெரியோர்களை விட படு குஷியாக வீட்டில் உள்ள குட்டீஸ்கள் தான் தீபாவளியை வரவேற்க வாசல் படியிலே உட்கார்ந்து காத்து கொண்டிருகின்றனர்.
இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் பரபரப்பான வேலைக்கு சற்று ஓய்வு,குடும்பத்தோடு சின்ன பட்டாசு வெடி, பலகாரம் என்று நாளே சூப்பர போகும் அப்படி தீபாவளி கொண்டாட்டத்தில் பட்டாசும்,பலகாரமும் முக்கியமானதுங்க அதுவும் குட்டீஸ்களை குதுகலப்படுத்த தாய்மார்கள் பலமாக முயற்சிகளை மேற்கொள்வார்கள் பலகராத்தில் குலாப் ஜாமுனை கண்டால் குழந்தைகள் குஷியின் உச்சத்திற்கே போய் விடுவார்கள்.அப்படி அவர்களை குஷி படுத்தும் இந்த குலாப் ஜாமுனை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
குலாப் ஜாமுனை எப்படி…..!
தேவையான பொருட்கள்
- பால் தேவைக்கேற்ப
- பால் பவுடர் 1 கப்
- சர்க்கரை 2 கப்
- சமையல் சோடா 1 / 2 தேக்கரண்டி
- மைதா 1 / 2 கப்
- உருக்கிய வெண்ணெய் 2 மேசைக்கரண்டி
- தண்ணீர் 1 கப்
- ஏலக்காய் 2
- எண்ணெய் பொரிப்பதற்கு
- சர்க்கரை பாகு செய்வதற்கு
குலாப் ஜாமூன் செய்முறை
சர்க்கரை பாகுவை :
மேலே குறிப்பிட்ட பொருட்களை ஒன்றாகக் கலந்து சர்க்கரை நன்றாக தண்ணீரில் கரையும் வரை நன்றாக சூடு படுத்தவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் பால் பவுடர், மைதா, சமையல் சோடா, வெண்ணெய் இதை அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.பிறகு தேவையான அளவு பால் ஊற்றி மாவை லூசாக பிசைந்து கொள்ளவும்.பிசைந்த வைத்த உருண்டையை சிறிது நேரம் அப்படியே வைக்கவும்.உருண்டையை 18 மற்றும் 20 பாகங்களாகப் பிரித்து சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
பின்னர் கடாயில் உருண்டையை பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி மிதமாக சூடுப்படுத்தவும்.பின் எண்ணெய் சூடானதும் கடாயில் உருண்டைகளைப் போட்டு பொன்நிறமாக பொரித்து எடுக்கவும். அவ்வாறு செய்யும் பொழுது அடுப்பை மிதமான சூட்டில் வைக்க வேண்டும்.
மேலும் நம் கடாயில் போட்ட குலாப் ஜாமுன் வெந்து மெதுவாக அடியிலிருந்து மேலே வர வேண்டும்.மேலே சொன்னவது போல பொன்னிறமானதும் மெதுவாக வெளியே எடுத்து ஏற்கனவே தயார் நிலையில் மிதமான சூட்டில் வைத்து இருக்கும் சர்க்கரைப் பாகில் இந்த குலாப் ஜாமுனை போடவும். அவ்வாறு போடும் குலாப் ஜாமுனை 30 நிமிடங்கள் சர்க்கரைப் பாகிலையே போட்டு விடவும்.பிறகு நன்கு சர்க்கரை பாகில் ஊறிய குலாப் ஜாமுன் இப்பொழுது சாப்பிடுவதற்கு தயார்.தித்திக்கும்இனிப்போடு இல்லத்தில் தீபாவளியை கொண்டாடுவோம்.
DINASUVADU