பூந்தி லட்டு தெரியும் இது என்ன தேங்காய் லட்டு…தீபாவளிக்கு தித்திக்கும்தேங்காய் லட்டு செய்வது எப்படி…!!
தீபாவளி என்றலே சந்தோஷம்,புத்தாடை,பலகாரம்,பட்டாசு என்று நாளே நச்சுன்னு இருக்கககூடிய இரு நல்ல நாளாகும்.அப்படி இந்தாண்டு நவ.6 தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் நாடும் ,மக்களும் தீபாவளியை வரவேற்க தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் குழந்தைகளும்,குடும்பங்களும் தீபாவளியை தீப ஒளியால் அலங்கரித்தும் ,பட்டாசுக்களை வெடிக்க விட்டும்,பலகாரங்களை சுவைத்தும் கொண்டாடக்கூடிய நன்நாளில் அம்மாக்களின் அன்பான பலகார லீஸ்ட்டில் தேங்காய் லட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்,புந்தி லட்டு,ரவா லட்டு என்பது போல் தேங்காய் லட்டு செய்து குட்டீஸ்களை அசத்துவோம்.
தேங்காய் லட்டு செய்வது எப்படி….!!
தேவையான பொருட்கள்
- தேங்காய் துருவல் 2 கப்
- சீனி 1 கப்
- பால் 2 கப்
- ஏலக்காய்த்தூள் 1 தேக்கரண்டி
- பதாம் பருப்பு 10
- பட்டர் 2 தேக்கரண்ட
செய்முறை
தேவையான பொருட்களை எடுத்து கொண்டு ஒரு அகன்ற பாத்திரத்தில் முதலில் பாலை ஊற்றி பாலை நன்கு கொதிக்க வைக்கவும்.பால் நன்கு கொதித்ததும் அதில் துருவி வைத்துருக்கும் தேங்காய் துருவலை பாலுடன் சேர்த்து நன்கு கிளறி குறைந்தது 10 அல்லது 15 நிமிடங்கள் நன்கு கொதிக்க வைக்கவும்.
கொதித்த பின்னர் அதில் தேவையான அளவு சீனி சேர்த்து சேர்த்த சீனி நன்றாக கரையும்வரை கிளறி விட வேண்டும் பின்னர் ஏற்கனவே எடுத்து வைத்துள்ள ஏலக்காய்த்தூளை அதனுடன் சேர்த்து நன்கு கிளறி அதனை இறக்கவும்.
இவை மிதமான சூட்டில் இருக்கும் போது நம் கையில் பட்டரை தடவி அதனை லட்டுகளாக பிடித்து வைத்து அதன்மீது பதாம் பருப்பை வைத்து எடுத்தால் சுவையான சூப்பரான தேங்காய் லட்டு ரெடி.தேங்காய் லட்டுடன் தித்திக்கும் தீபாவளியை கொண்டாடுவோம்.
DINASUVADU