புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மார்ச் 12ம் தேதி உள்ளூர் விடுமுறை…!!
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மார்ச் 12ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் கணேஷ் அறிவிப்பு செய்துள்ளார். திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு இந்த விடுமுறை அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதனை முன்னிட்டு வரும் மார்ச் 12ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி,கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.