மேலும் புதிய வடிவில் தாயாராகும் பிரான்ஸ் டிஸ்னிலாண்ட் பொழுது போக்கு பூங்கா!
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள டிஸ்னிலாண்ட்(Disneyland) பொழுது போக்கு பூங்காவில் வால்ட் டிஸ்னி (Walt Disney) நிறுவனம் மேலும் 16 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரான் உடனான சந்திப்புக்குப் பின் வால்ட் டிஸ்னி நிறுவன தலைமை செயல் அதிகாரி ராபர்ட் இகேர் (Robert Iger) இந்த முடிவை அறிவித்தார்.
ஏற்கெனவே பல பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்துள்ள இந்த பூங்காவில், ஹாலிவுட் சூப்பர் ஹீரோ கதாப்பாத்திரங்களான ஸ்பைடர் மேன், ஹல்க் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. இந்த புதிய அரங்குகளில் 2021ம் ஆண்டு முதல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இதோ வீடியோ பதிவு ….