கொரோனா அச்சத்தால் அண்ணாத்த படத்திலுள்ள சண்டைக் காட்சிகளை நீக்க ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் படம் என்றாலே ஹைலைட் சண்டைக்காட்சிகள் தான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் தற்போது அவர் நடித்து வரும் அண்ணாத்த படத்திலுள்ள சண்டைக் காட்சிகளை நீக்க கூறியுள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, மீனா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கவுள்ளனர். டி. இமான் முதல்முறையாக ரஜினிகாந்த் படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் தீம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, மீண்டும் ஷூட்டிங் தொடங்கவிருந்த படக்குழுவினரை ரஜினிகாந்த் வேண்டாமென்று கூறி தடை செய்துள்ளார். அது மட்டுமின்றி படத்தில் வரும் இரண்டு சண்டை காட்சிகளை நீக்கவும் இயக்குநரிடம் அறிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன . ஏனெனில் சண்டையிடுகையில் நடிகர்களை தொட்டு நடிப்பதன் மூலம் கொரோனா பாதிப்பு ஏற்படும் என்று அஞ்சுகிறாராம். சண்டை காட்சிகளை நீக்க ரஜினிகாந்த் கூறியதால் இயக்குநர் சற்று கவலையில் உள்ளாகியுள்ளார். மேலும் ரசிகர்களை இந்த தகவல் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா பொறுத்தவரையில் தான் இசையமைத்த பாடல்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் உடனடியாகவே அந்த பாடல்களை நீக்க கோரி…
சென்னை : இந்தி மொழி திணிப்பு மீதான குற்றசாட்டு என்பது நாள்தோறும் எதிர்க்கட்சியினர் மத்தியில் வலுத்து கொண்டே செல்கிறது. அதற்கேற்றாற்…
சென்னை : இன்றயை காலத்தில் AI தொழில்நுட்பம் என்பது பெரிய அளவில் வளர்த்துக்கொண்டு இருக்கும் நிலையில், சினிமாவிலும் அதனை அதிகமாக பயன்படுத்த…
திருநெல்வேலி : திருநெல்வேலி , பாளையம்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் இன்று 8ஆம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர்…
லக்னோ : பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும்…