இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் இரண்டு கருப்புப் பெட்டிகள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் இருந்து போன்டினாக்கை நோக்கி ஸ்ரீவிஜயா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான “போயிங் 737” மாடல், SJ182 என்று அழைக்கப்படும் விமானம், 62 பயணிகளுடன் ஜகார்தாவில் இருந்து புறப்பட்ட விமானம், 4 ஆம் நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. ஜாவா கடற்பரப்பில் விழுந்ததாக சந்தேக்கம் எழுந்ததை தொடர்ந்து தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது, ஜாவா கடற்பகுதியில் மீன்பிடிக்க சென்று மீனவர்கள், கடலில் விமானத்தின் சிதைந்த பாகங்களை கண்டெத்துள்ளனர். இதையடுத்து அந்த பாகங்கள், மாயமான விமானத்தின் பாகங்கள் தானா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால், பயணம் செய்தவர்களின் நிலை குறித்து தற்பொழுதுவரை எந்தொரு தகவல்களும் வெளிவரவில்லை.
இந்நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தின் இரண்டு கருப்புப் பெட்டிகள் கண்டறியப்பட்டுள்ளதாக இந்தோனேசியாவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்புக் குழுவின் தலைவர் சூர்ஜான்டோ தஜ்ஜோனோ தெரிவித்துள்ளார். மேலும், இரண்டு கருப்பு பெட்டிகளை விரைவில் மீட்டெடுக்க முடியும் என்று இராணுவத் தலைவர் ஹாடி தஜ்ஜான்டோ கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தரமான படைப்புகளை எப்போது ஏமாற்றம் அளிக்காமல் மக்களுக்கு கொடுக்கும் இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். இதுவரை இவர் இயக்கிய…
சென்னை: ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன்? ஒன்றிய அரசின் கீழ் உள்ள தேர்வு…
திருநெல்வேலி: நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு, வழக்கு விசாரணைக்கு வந்த இளைஞர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல்…
சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற…
சென்னை :நெல்லிக்காய் குல்கந்து தித்திக்கும் சுவையில் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; நெல்லிக்காய்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. சொல்லப்போனால், கடந்த மூன்று…