ஒரு நூற்றாண்டுக்கு முன்பு அழிந்ததாக நினைத்த கலபகோஸ் ஆமை ஈக்வடாரில் கண்டுபிடிப்பு..!
ஆமைகள் பல ஆண்டுகள் உயிர்வாழக்கூடியவை. அந்த வகையில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக அழிந்துவிட்டதாக நினைத்த கலபகோஸ் ஆமை தற்போது பெர்னாண்டினாவின் கலபகோஸ் தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை பற்றி சுற்றுசூழல் அமைச்சர் குஸ்டாவோ மரிக் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் இந்த காலபோஸ் ஆமை 100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துவிட்டதாக நம்பப்படுகிறது. ஆனால் அது உயிரோடு இருப்பதை தற்போது உறுதிப்படுத்தியுள்ளோம். மேலும் இந்த செலோனாய்டிஸ் பாண்டஸ்டிகஸ் ஆமை கலபகோஸ் தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியா அகாடமி ஆப் சயின்ஸ் மேற்கொண்ட பயணத்தின் போது இந்த குறிப்பிட்ட வகை ஆமையை கண்டுபிடித்தனர். அதன் பிறகு, இந்த ஆமையின் டிஎன்ஏ வை பரிசோதித்து ஒப்பிட்டு பார்த்ததில் இது 1906 ஆம் ஆண்டு இருந்தவற்றுடன் ஒத்திருக்கிறது. இந்த ஆமை செலோனாய்டிஸ் பாண்டஸ்டிகஸ் இனத்தை சேர்ந்தது என்றும், இது பெரிய வகை ஆமைகளின் வகையை சேர்ந்தது என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், இது கலபகோஸ் தீவுக்கூட்டத்தை பூர்வீகமாக கொண்டது.
அதனை தொடர்ந்து சுற்றுசூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கலபகோஸ் தேசிய பூங்காவின் இயக்குனர் டேனி ரூடா, இந்த ஆமையின் கண்டுபிடிப்பு எங்களுக்கு இந்த இனத்தை மீட்டெடுப்பதற்கான நம்பிக்கையை அளித்துள்ளது. அதை போல லோன்சம் ஜார்ஜ் இனம் மற்ற இன பெண் ஆமையுடன் இணைய மறுத்து 2012 ஆம் ஆண்டு அழிந்துவிட்டது. இந்த நிலைமை கலபகோஸ் ஆமைக்கு வரக்கூடாது என்பதை குறித்தும் தெரிவித்தார்.