34,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த woolly rhino-ன் உடல் கண்டெடுப்பு!

Default Image

34,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த woolly rhino-ன் உடல் கண்டஎடுக்கப்பட்டுள்ளது. இது மூன்று அல்லது நான்கு வயதில் காண்டாமிருகம் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம்.

சமீபத்தில் ரஷ்யாவின் கிழக்கு சைபீரியாவில் உள்ள ஒரு உறைந்த பனிபரப்பு உருகியது. உள்ளூர் மக்கள் அந்த பனி பரப்பில் புதைந்து கிடந்த ஒரு இறந்த விலங்கின் உடலை மீட்டனர். ஆராய்ச்சியாளர்கள் இந்த விலங்கின் உடலை மீட்டு ஆய்வு செய்தபோது 34 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினம் என்றும், ஒருவகை காண்டாமிருகத்தின் உடல் என்பதையும் கண்டறிந்தனர்.

இந்த காண்டாமிருகம் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்க கூடும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். மூன்று அல்லது நான்கு வயதில் காண்டாமிருகம் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்றும், உடல் நிரந்தர  பனிபரப்பில் புதனித்து இருந்ததால், இத்தனை ஆண்டுகளாக சிதையாமல் இருந்துள்ளது என ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்