ஓமைக்ரானின் மற்றும் இரு புதியவகை மாறுபாடு கண்டுபிடிப்பு …!
ஏற்கனவே உலகமெங்கும் பரவியுள்ள கொரோனா வைரஸ் கடந்த இரு வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், அவ்வப்போது கொரோனாவின் புதிய வகை மாறுபாடுகளும் அங்கங்கு கண்டறியப்பட்டு மக்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில், ஏற்கனவே ஓமைக்ரானின் BA.1, BA.2, BA.1.1, A.3 ஆகிய மாறுபாடுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்பொழுதும் ஓமைக்ரான் வைரஸின் புதிய இரு மாறுபாடுகள் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது. BA.4 மற்றும் BA.5 மாறுபாடுகளாகிய இந்த புதிய மாறுபாடுகளை உலக சுகாதார நிறுவனம் உன்னித்து கண்காணித்து வருவதாகவும், இதற்காக புதிய ஆய்வு ஒன்று தேவைப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.