11 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அரிய உயிரினப்படிமம் கண்டுபிடிப்பு..!
11 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ட்ராகன் போன்ற பறக்கக்கூடிய அரிய வகை உயிரினப்படிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் 11 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வேட்டையாடும் திறன் கொண்ட பறவையின் கீழ்த்தாடை படிவுகள் கண்டு பிடித்துள்ளனர்.
ட்ராகன் போன்ற அமைப்பு உடைய இந்த உயிரினத்தின் புதைப்படிமங்கள் கிடைத்துள்ளது. இதற்கு ‘தபுங்காகா ஷாவி’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்த பறக்கக்கூடிய ட்ராகன் போன்ற உயிரினம் 11 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் அதிக அளவு ஆதிக்கம் செலுத்தியிருக்க வாய்ப்புள்ளது.
மேலும், இதன் நீளம் 23 அடியும் இதன் தலை 3 அடி நீளமும் உடையது என்று கூறியுள்ளனர். இதற்கு வேட்டையாடும் திறன் கொண்ட 40 மிகக்கூரிய பற்கள் இருந்திருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளனர்.