அழிந்துவிட்டதாக எண்ணப்பட்ட அரியவகை பறவை கண்டுபிடிப்பு…!
அழிந்துவிட்டதாக எண்ணப்பட்ட பிளாக் ப்ரவுடு பாப்ளர் என்ற பறவையை, பறவை ஆர்வலர்கள் 170 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடித்துள்ளனர்.
காலநிலை மாற்றம் காரணமாக பல்வேறு வகையான விலங்குகள் மற்றும் பறவைகள் வாழ்ந்ததற்கான அடையாளமே இல்லாமல் அழிந்து போயுள்ளது. அந்த வாகையில் அழிந்துவிட்டதாக எண்ணப்பட்ட பிளாக் ப்ரவுடு பாப்ளர் என்ற பறவையை, பறவை ஆர்வலர்கள் 170 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த பறவை இந்தோனேசியா காடுகளில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பறவை ஆர்வலர், கஸ்டின் அக்பர் கூறுகையில், இது இது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. இது அந்த பராவைத்தானா என்ற சந்தேகம் இருந்த நிலையில், உறுதிப்படுத்தப்பட்ட பின் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என தெரிவித்துள்ள்ளார்.