கடுமையான நோய்களை ஏற்படுத்தும் கொரோனாவின் புதிய வகை கண்டுபிடிப்பு!
இங்கிலாந்தில், கடந்த சில நாட்களில் கொரோனாவின் புதிய வகை கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த, ஒவ்வொரு நாட்டு அரசும் பாலா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்தில், கடந்த சில நாட்களில் கொரோனாவின் புதிய வகை கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பாராளுமன்றத்தில் அளித்துள்ள அறிக்கையில், கொரோனாவின் புதிய வகையை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். இது இங்கிலாந்தின் தென்கிழக்கில் வேகமாக பரவுவதாக தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த வகை கொரோனா தற்போதுள்ள கொரோனா வகையை விட வேகமாக பரவுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது என்றும், இது கடுமையான நோய்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.