பாகிஸ்தானில் இருந்து தொடங்கி ஜம்மு பகுதியில் உள்ள சம்பா வரை பயங்கரவாதிகளால் தோண்டப்பட்ட சுரங்கத்தை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் எல்லையில் நிலவும் பதற்றத்தை பயன்படுத்தி ஜம்மு காஷ்மீரில் நுழைவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. அதனால் ஜம்முவில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஜம்முவில் உள்ள சம்பா பகுதியில் சோதனையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர், இந்தியா பகுதியை நோக்கி பாகிஸ்தானில் இருந்து தோண்டப்பட்ட சுரங்கத்தை கண்டுபிடித்தனர். இதுகுறித்து எல்லை பாதுகாப்பு படை ஐஜி ஜம்வால் கூறுகையில், 20 அடி நீளமும், 3 முதல் 4 அடி விட்டமும் உடைய இந்த சுரங்கம் மணல் மூட்டைகளை கொண்டு உருவாக்கப்பட்டதாகவும், பாகிஸ்தானில் இருந்து தொடங்கி ஜம்மு பகுதியில் உள்ள சம்பாவில் முடிவடைவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சுரங்கத்தை வலுப்படுத்த பயன்படுத்திய மணல் மூட்டைகளை கொண்ட கோணிப்பைகளில் பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரை சேர்ந்த நிறுவனத்தின் பெயர் இருந்ததாகவும் எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் படையினரின் அனுமதியும், பிற ஏஜென்சிகளின் ஒப்புதலும், ஆதரவும் இல்லாமல் சுரங்கத்தை தோண்ட முடியாது என்றும், முறையாக திட்டமிட்ட பின்னர் தான் சுரங்கம் தோண்டப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு படை ஐஜி கூறியுள்ளார்.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…