விருதுநகரை சேர்ந்தவர் கோபி. இவர் ராமநாதபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு தனது மகன்களான விமல் மற்றும் விஷவாவுடன் சென்றுள்ளனர். அப்போது அவர் காட்டு பிள்ளையார் கோவில்தெரு பகுதியில் உள்ள பள்ளி குளத்தில் குளிக்க தன் இரண்டு மகன்களுடன் சென்றுள்ளனர்.
அப்போது குளித்துக் கொண்டு இருக்கும் போது விமல்(15) குளத்தில் மூழ்கியுள்ளார். இதனை பார்த்த விஷ்வா, காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என சத்தமிட்டுள்ளார். இதனை கேட்டு அருகில் இருந்தவர்கள் காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால், விமலை காப்பாற்ற முடியாமல் ஆழத்திற்குள் சென்றதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், 5 மணி நேர போராட்டத்திற்கு பின் விமலின் சடலத்தை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இதனையடுத்து இந்த விபத்து குறித்து ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதால், மே 25 மற்றும் 26-ம் தேதி கோவை, நீலகிரி ஆகிய 2…
லக்னோ : ஐபிஎல் 2025 லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ்…
டெல்லி : டெல்லியில் நாளை (மே 24) நடைபெறவுள்ள 'நிதி ஆயோக்' கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து…
சென்னை : நடிகர் சிம்பு தற்போது தக் லைஃப் படத்தின் ப்ரமோஷன் பணியில் பிசியாக உள்ள நிலையில், அவரது 50வது…
ஜெய்ப்பூர் : ஆபரேஷன் சிந்தூர்க்கு ஆதரவு அளிக்கும் விதமாக, ஜெய்ப்பூரில் உள்ள இனிப்பகம் ஒன்று மைசூர் பாக், இனிப்புகளின் பெயர்களை…
சென்னை : நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவியின் விவாகரத்து செய்தி ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…