நிபுணர்களை சீனாவுக்குள் அனுமதிக்காதது ஏமாற்றமளிக்கிறது – WHO கண்டனம்
கொரோனா வைரஸ் பற்றி ஆய்வு செய்ய சீனாவுக்கு செல்லவிருந்த மருத்துவ நிபுணர்களை அனுமதிக்காதது மிகுந்த ஏமாற்றம் தருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனாவின் பிறப்பிடம் சீனவாக இருக்கும் நிலையில், இந்த வைரஸின் தோற்றம் குறித்து விசாரிக்க உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது. இதற்காக சர்வதேச நாடுகளை சேர்ந்த நிபுணர் குழுவை WHO ஏற்படுத்தியது. 10 பேர் கொண்ட அந்த குழு இம்மாத தொடக்கத்தில் சீனாவின் உகான் நகருக்கு செல்ல திட்டமிட்டு இருந்தது.
ஆனால், சீனாவிடம் இருந்து இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள, உலக சுகாதார அமைப்பு, நிபுணர்களின் சீன பயணம் முக்கிய பணிகளில் ஒன்று என கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.