சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ குறித்து இயக்குனரின் ட்வீட்.!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படத்தின் எடிட்டிங் பணிகள் நடந்து வருவதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் மற்றும் அயலான் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார் .இதில் அயலான் படத்தினை ‘இன்று நேற்று நாளை’ படத்தினை இயக்கிய ரவிகுமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத்தி சிங்,யோகி பாபு மற்றும் கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
கே.ஜி.ஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் இஷா கோபிகர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து டி.முத்துராஜ் இசையமைக்கிறார் . பெரும் பொருட் செலவில் உருவாகி வரும் இப்படத்தில் 2500 கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.சயின்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருவதாக இயக்குநர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கிராஃபிக் பணிகள் அதிகமுள்ள அயலான் படத்தின் எடிட்டிங் பணிகள் தற்போது நடந்து வருவதாக புகைப்படத்துடன் இயக்குனர் ரவிகுமார் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இந்த ஆண்டே ரிலீஸ் ஆகவிருக்கும் அயலான் படத்தின் ரிலீஸ் தேதியானது சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
with @AntonyLRuben ✂️ ???? #ayalaan pic.twitter.com/moxxfkTHDE
— Ravikumar R (@Ravikumar_Dir) February 4, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025